சினிமா
தளபதி படத்திற்கு சூப்பர் ஸ்டார் மறுப்பு ..!காரணம் என்ன?பேரதிர்ச்சியில் ரசிகர்கள்..

தளபதி படத்திற்கு சூப்பர் ஸ்டார் மறுப்பு ..!காரணம் என்ன?பேரதிர்ச்சியில் ரசிகர்கள்..
விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட தளபதி 69 படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேல் மட்டத்தில் உள்ளது. முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார் என விஜய் அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தப் படம் அவரின் கடைசியாகும் என்ற தகவல் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் அமைக்கப்பட்ட செட்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சமீபத்தில், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தளபதி 69-ல் நடிக்க இருப்பதாக கூறியிருந்தாலும், தற்போது அவர் இப்படத்தில் இணையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹெச். வினோத் அவரை அணுகியதுடன், பேச்சுவார்த்தைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இதனால் எந்தவொரு ஒப்பந்தமும் இறுதி செய்யப்படாதது குறிப்பிடத்தக்கது.சிவராஜ்குமார் ஏற்கனவே ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.மேலும் இவர் தளபதி படத்திற்கு மறுப்பு தெரிவித்தது ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.