சினிமா
கங்குவா தந்த வலி! சூர்யா எடுத்த முடிவு! வெளியானது அப்டேட்!

கங்குவா தந்த வலி! சூர்யா எடுத்த முடிவு! வெளியானது அப்டேட்!
நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கங்குவா இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படம் தொடர்பான அப்டேட் வெளியாகி இருக்கிறது. சூர்யாவின் வெளிவரவிருக்கும் திரைப்படம் சூர்யா 44. கார்த்திக் சுப்ராஜ் இயக்கி வரும் இப்படத்தில், சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.நடிகர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படம் சூர்யா 45. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யாவின் 45வது படத்தில் அவருக்கு ஜோடியாக மௌனம் பேசியதே மற்றும் ஆறு படங்களில் நடித்துள்ள முன்னனி நடிகை த்ரிஷா நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இன்னும் இது தொடர்பான அப்டேட் இன்னும் வெளியாகவில்லை.