விநோதம்
உலர்ந்த மற்றும் ஊறவைத்த வால்நட் பருப்புகள்… இரண்டில் எது பெஸ்ட்…???

உலர்ந்த மற்றும் ஊறவைத்த வால்நட் பருப்புகள்… இரண்டில் எது பெஸ்ட்…???
பல்வேறு உடல்நல பலன்களை தருவது மட்டுமல்லாமல் இந்த குளிர் காலத்துக்கு ஏற்ற ஒரு ஸ்பெஷலான டிரீட்டாக அமைவது வால்நட் பருப்புகள். ஆனால் வால்நட் பருப்புகள் என்று சொன்னவுடனேயே அதனை அப்படியே சாப்பிட வேண்டுமா அல்லது ஊறவைத்து சாப்பிட வேண்டுமா என்ற கேள்வி பலருக்கு எழலாம்.
பொதுவாக நட்ஸ் என்றாலே அது ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக வால்நட் பருப்பில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளன. எனினும் இதனை நாம் சாப்பிடும் விதம் அந்த ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைப்பதை மாற்றி அமைக்கலாம்.
வால்நட் பருப்புகள் சாப்பிடுவதால் நம்முடைய ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள்
வால்நட் பருப்புகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், அதிலும் குறிப்பாக ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய ஊட்டச்சத்து. அதுமட்டுமல்லாமல் வால்நட் பருப்புகளில் புரோட்டின், நார்ச்சத்து, வைட்டமின் E போன்ற வைட்டமின்கள், மெக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்ற தாதுக்கள் அடங்கியுள்ளன. இந்த தனித்துவமான ஊட்டச்சத்துக்கள் வால்நட் பருப்பில் இருப்பதன் காரணமாக, அது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, வீக்கத்தை குறைப்பது மற்றும் இதய செயல்பாட்டை அதிகரிப்பது போன்ற நன்மைகளை நமக்கு வழங்குகிறது.
பெரும்பாலான நபர்கள் வால்நட் பருப்புகளை அப்படியே உலர்ந்த நிலையில் சாப்பிடுகிறார்கள். அது சௌகரியமானதாகவும், நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்கும் உதவுகிறது. அதே நேரத்தில் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தக்க வைக்கப்படுகின்றன. எனினும் ஒரு சிலர் செரிமான பிரச்சனைகள் காரணமாகவும், வால்நட் பருப்பில் உள்ள டானின்கள் மற்றும் பைடிக் அமிலம் காரணமாகவும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலில் பிரச்சனை ஏற்படும் என்பதால் வால்நட் பருப்புகளை ஊறவைத்து சாப்பிடுவது சிறந்தது என்று கருதுகின்றனர்.
வால்நட் பருப்புகளை ஊற வைக்காமல் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்
ஊற வைத்த வால்நட் பருப்புகள்
வால்நட் பருப்புகளை பல மணி நேரங்கள் தண்ணீரில் ஊற வைப்பதால், அதனை செரிமானம் செய்வது நமக்கு எளிதாகிறது. மேலும் ஊட்டச்சத்துக்கள் எளிதாக கிடைக்கின்றன. வால்நட்டை ஊற வைக்கும் செயல்முறையில் அதில் உள்ள டானின்கள் மற்றும் பைடிக் அமிலம் அளவுகள் குறைகின்றன. இதனால் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை மிக எளிதாக நம்முடைய உடல் உறிஞ்சுகிறது. கூடுதலாக ஊற வைப்பதால் செரிமானத்திற்கு உதவும் என்சைம்கள் ஆக்டிவேட் செய்யப்படுகின்றன.
இதையும் படிக்க:
இவையெல்லாம் மாரடைப்புக்கான ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்.. என்னென்ன தெரியுமா..?
ஊறவைத்த வால்நட் பருப்புகள் மற்றும் உலர்ந்த வால்நட் பருப்புகள் ஆகிய இரண்டில் எது சிறந்தது என்று பேசும்போது, அது தனி நபருடைய விருப்பங்கள் மற்றும் செரிமான ஆரோக்கியத்தை பொறுத்து அமையும். அடிக்கடி வயிற்று உப்புசம் அல்லது செரிமான அசௌகரியத்தை அனுபவிக்கும் நபர்கள் வால்நட் பருப்புகளை ஊற வைத்து சாப்பிடலாம். அதே நேரத்தில் குறைவான செரிமானம் கொண்ட நபர்கள் ஊட்டச்சத்து உறிஞ்சதலை அதிகரிப்பதற்கு வால்நட் பருப்புகளை ஊற வைத்து சாப்பிடுவது பலன் தரும்.
இதையும் படிக்க:
மூல நோய் அறிகுறிகள் என்ன..? சரியான சிகிச்சை பெறுவது எப்படி? முழுமையான விளக்கம்.!
மாறாக உலர்ந்த வால்நட் பருப்புகளை ஸ்நாக்ஸாக உடனடியாக சாப்பிடலாம். மேலும் பல்வேறு உணவுகளிலும் எந்த முன் ஏற்பாடுகள் இல்லாமல் பயன்படுத்தலாம். உலர்ந்த மற்றும் ஊற வைத்த வால்நட் பருப்பு ஆகிய இரண்டுமே தனித்துவமான உடல்நல பலன்களைக் கொண்டுள்ளன. ஊற வைத்த வால்நட் பருப்புகள் செரிமானத்தை மேம்படுத்தி, ஊட்டச்சத்து உறிஞ்சுதலை விரைவுப்படுத்தும். அதே நேரத்தில் உலர்ந்த வால்நட் பருப்புகள் சாப்பிடுவதற்கு சௌகரியமானதாக அமையும். ஆனால், நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.