Connect with us

விநோதம்

மருந்துகள் இல்லாமல் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க வேண்டுமா? – ஆய்வில் நிரூபணமான தகவல்

Published

on

Loading

மருந்துகள் இல்லாமல் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க வேண்டுமா? – ஆய்வில் நிரூபணமான தகவல்

ஒவ்வொரு நாளும் வெறும் 20 – 27 நிமிட உடற்பயிற்சி இதய நோய் அபாயத்தை 28% வரை குறைக்கும் என்று நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. படிக்கட்டுகளில் ஏறுதல் அல்லது மேல்நோக்கி நடப்பது போன்ற குறுகிய கால உடற்பயிற்சிகளை, உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக் கொள்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று ஒரு புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

சர்குலேஷன் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில், சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன் (யுசிஎல்) தலைமையிலான சர்வதேச கல்விக் கூட்டமைப்பிலிருந்து புரோபாஸ் (ProPASS) என்கிற எதிர்கால உடல் செயல்பாடு, உட்கார்தல் மற்றும் தூக்கம் (Prospective Physical Activity, Sitting and Sleep) உள்ளிட்டவற்றை ஆராய ஒரு குழு உருவாக்கப்பட்டது.

Advertisement

உட்கார்ந்து கொண்டிருப்பதற்கு பதிலாக சுமார் 20 முதல் 27 நிமிடங்களுக்கு, படிக்கட்டுகளில் ஏறுதல், ஓடுதல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவது இரத்த அழுத்தத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

உயர் இரத்த அழுத்தம் என்பது தமனி சுவர்களுக்கு எதிரான இரத்தத்தின் வேகம் தொடர்ந்து அதிகமாக இருக்கும்போது ஏற்படுகிறது. இது இதயம் மற்றும் இரத்த நாளங்களில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நிலை மோசமாகும் பட்சத்தில் இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். வழக்கமான உயர் இரத்த அழுத்தம் என்பது 140/90 mmHg என்கிற அளவில் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும்.

Advertisement

மூத்த எழுத்தாளரும், பேராசிரியருமான இம்மானுவேல் ஸ்டாமடாகிஸ் இது குறித்து பேசியதாவது, உயர் இரத்த அழுத்தம் என்பது ஓர் உலகளாவிய சுகாதாரப் பிரச்சனையாக இருக்கிறது. ஆனால் தினசரி செயல்பாட்டில் சிறிய மற்றும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்வதன் மூலம் மருந்துகளின் தேவையை கணிசமாக குறைக்க முடியும் என்கிறார்.

“சைலன்ட் கில்லர்” என்று அழைக்கப்படும் உயர் இரத்த அழுத்தம், உலகளவில் 1.28 பில்லியன் பெரியவர்களை பாதிக்கிறது மற்றும் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோய் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கும் காரணமாகிறது.

வெவ்வேறு உடல் செயல்பாடுகள் இரத்த அழுத்தத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆராய, ஐந்து நாடுகளில் உள்ள 14,761 தன்னார்வலர்களிடமிருந்து தகவல்களைப் பெற்று ஒரு குழு ஆய்வு செய்தது. ஒவ்வொரு பங்கேற்பாளரும் அவர்களின் செயல்பாடுகள் மற்றும் இரத்த அழுத்த அளவைக் கண்காணிக்க அவர்களின் தொடையில் ஒரு முடுக்கமானியை (Accelerometer) அணிந்திருந்தார்கள்.

Advertisement

இதையும் படிக்க:
Thyroid Symptoms: காரணமின்றி உடல் எடை அதிகரிக்குதா? அப்படி என்றால் உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கலாம்!

ஆராய்ச்சியாளர்கள் இவர்களின் தினசரி செயல்பாடுகளை ஆறு வகைகளாக வகைப்படுத்தினர்: தூங்குதல், உட்காருதல், மெதுவாக நடப்பது, வேகமாக நடப்பது, நிற்பது, ஓடுவது மற்றும் படிக்கட்டு ஏறுவது போன்ற தீவிரமான பயிற்சிகளாக வகைப்படுத்தப்பட்டது.

மிதமான மற்றும் தீவிரமான உடல் செயல்பாடுகளுடன், உட்கார்ந்த நேரத்தை மாற்றும்போது ஏற்படும் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக அவர்கள் புள்ளி விவர மாதிரிகளை பயன்படுத்தினர். ஒவ்வொரு நாளும் வெறும் 20-27 நிமிட உடற்பயிற்சி இதய நோய் அபாயத்தை 28% வரை குறைக்கும் என்று அவர்களின் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

Advertisement

இதையும் படிக்க:
ஹைப்போ தைராய்டிசம் .. நீங்கள் அலட்சியம் செய்யக்கூடாத 5 அறிகுறிகள்..

யூசிஎல் (UCL) இன் முன்னணி எழுத்தாளர் டாக்டர் ஜோ ப்ளாட்ஜெட், எந்தவொரு உடற்பயிற்சியும், பேருந்துக்காக ஓடுவது அல்லது அருகிலுள்ள இடத்திற்கு செல்ல சைக்கிள் ஓட்டுவது கூட உங்கள் உடல்நலத்தில் குறிப்பிட்ட பலன்களை தரும் என்று விளக்கினார். நடைப்பயிற்சி செய்வது குறிப்பிடத்தக்க பலன்களைக் கொண்டிருந்தாலும், தீவிரமான செயல்பாடுகள் இரத்த அழுத்தத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன