Connect with us

விநோதம்

கண் ஆரோக்கியமும் கட்டுக்கதைகளும்…மருத்துவர் கூறும் 10 டிப்ஸ்கள்!

Published

on

Loading

கண் ஆரோக்கியமும் கட்டுக்கதைகளும்…மருத்துவர் கூறும் 10 டிப்ஸ்கள்!

கிட்டப்பார்வை இருப்பது ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. அதிக திரை நேர  இதுபோன்ற பாதிப்புகளுக்கான காரணம் என தெரியும் போது அது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. எனினும், இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்கவும், கண்களை பாதுகாக்கவும் உதவும் சில டிப்ஸ்களை தற்போது தெரிந்துகொள்ளலாம்.

தொழில்நுட்ட வளர்ச்சியால் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதனால் இளைஞர்களும் குழந்தைகளுமே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவர்களிடையே அதிக திரை நேரம் காரணமாக கிட்டப்பார்வை பிரச்சனை அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. இந்த டிஜிட்டல் யுகத்தில், பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் நம் வாழ்க்கையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதனால், உலகம் முழுவதும் மயோபியாவின் தொற்றுநோய் அதிகரித்து வருகிறது. முன்னர் கண்ணாடி அணிவது அரிதாக இருந்த நிலையில், தற்போதைய தலைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பலரும் கண்ணாடிகளை அணிந்து வருகின்றனர்.

Advertisement

கண் ஆரோக்கியம் குறித்த கட்டுக்கதைகள்:

கட்டுக்கதை 1: திரை நேரம் அதிகரிப்பதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் கிட்டப்பார்வை அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க:
ஹைப்போ தைராய்டிசம் .. நீங்கள் அலட்சியம் செய்யக்கூடாத 5 அறிகுறிகள்..

Advertisement

உண்மை: குருகிராமில் உள்ள நோபல் ஐ கேர் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் திக்விஜய் சிங் கருத்துப்படி, நீண்ட நேரம் ஸ்லைடுகளைப் படிப்பதாலும் அல்லது பார்ப்பதாலும் கண்களில் சிரமம் ஏற்படும் வாய்ப்புகள் எப்போதும் உண்டு. ஆனால் இது மயோபியாவை உருவாக்குவதற்கு மட்டும் வழிவகுக்காது. மாறாக, மரபணுஅல்லது உடல் செயல்பாடு இல்லாதது முக்கிய காரணங்களாகும் என அவர் கூறுகிறார். உண்மையில், வெளியில் அதிக மணிநேரம் செலவிடுவது குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது என்பதை நிரூபிக்கும் ஆய்வுகளும் உள்ளன. மேலும் இது அவர்களின் திரை நேரம் குறைவதால் மட்டும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுக்கதை 2: திரைகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியே கிட்டப்பார்வை பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

உண்மை: நீல ஒளியானது கண்களில் எந்தத் தீய விளைவுகளையும் ஏற்படுத்தாது. இருப்பினும் திரைகளை அதிகமாகப் பயன்படுத்துவது தூங்குவதில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இதனால் ஒருவருக்கு போதுமான ஓய்வு கிடைக்காது. இது போன்ற டிஜிட்டல் சாதனங்களில் இருந்து வெளியேறும் நீலநிற ஒளியை தவிர்ப்பதன் மூலம் அல்லது தூங்குவதற்கு குறைந்தது ஒரு மணிநேரத்திற்கு முன் திரைகளைப் புறக்கணிப்பதன் மூலம் இதைத் தவிர்க்கலாம்.

Advertisement

இதையும் படிக்க:
மூல நோய் அறிகுறிகள் என்ன..? சரியான சிகிச்சை பெறுவது எப்படி? முழுமையான விளக்கம்.!

கட்டுக்கதை 3: காகிதத்தில் படிப்பதை விட திரையில் படிப்பது மோசமானது.

உண்மை: திரை அல்லது காகிதம் என எதுவாக இருந்தாலும் குறிப்பிட்ட ஒன்றை கூர்ந்து கவனிக்க வேண்டிய நிலை ஏற்படுமாயின் அது கிட்டப்பார்வையின் ஆபத்தை அதிகரிக்கலாம். புத்தகம் படிப்பது போன்ற விஷயங்களில் நீண்ட நேரம் கவனம் செலுத்துவது கண்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. 20-20-20 விதி (ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 வினாடிகளுக்கு 20 அடி தூரத்தைப் பார்ப்பது) கண்ணின் அழுத்தத்தை ஓரளவு குறைக்க உதவும்.

Advertisement

கட்டுக்கதை 4: திரைகளில் செலவிடும் நேரத்தைக் குறைப்பது கிட்டப்பார்வை பிரச்சனையை தடுக்கும்.

உண்மை: திரை நேரத்தைக் குறைப்பது கண் அழுத்தத்தை குறைக்க உதவுமே தவிர, கிட்டப்பார்வை பிரச்சனையை இது நேரடியாகத் தடுக்காது. ஆர்த்தோகெராட்டாலஜி லென்ஸ்கள், அட்ரோபின் கண் சொட்டுகள் அல்லது கண் பராமரிப்பு நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் சிறப்பு கண்ணாடிகள் போன்ற பொருத்தமான சிகிச்சைகள் மயோபிக் எனப்படும் கிட்டப்பார்வை முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றன.

கட்டுக்கதை 4: குழந்தைகள் மட்டுமே திரை மயோபியாவால் பாதிக்கப்படுகிறார்கள்.

Advertisement

உண்மை: டிஜிட்டல் திரையில் அதிகப்படியான பயன்பாடு பெரியவர்களுக்கும் கண் அழுத்தத்திற்கு வழிவகுக்கும். ஆனால் இது கிட்டப்பார்வை பிரச்சனையை அதிகப்படுத்தவோ அல்லது முற்றிலுமாக நிறுத்துவது போன்று கிடையாது. வறண்ட கண்கள் அல்லது தலைவலி போன்ற கண் பார்வைக் கஷ்டத்தின் அறிகுறிகள் ஏற்படுவதுண்டு. ஆனால், அவை ஓய்வு மற்றும் பொருத்தமான சிகிச்சைகளின் மூலம் சரிசெய்யப்படலாம்.

இதையும் படிக்க:
இரவில் படுக்கும் முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன..?

கண்களை பராமரிக்க உதவும் 10 குறிப்புகள்:

Advertisement

1. நீண்ட திரை நேரத்தை தவிர்க்கவும்: குறுகிய இடைவெளிக்கு மட்டுமே திரையை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருவர் ஓய்வு எடுத்து 20 வினாடிகள் தொலைவில் உள்ள ஒரு பொருளின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் டாக்டர் சிங்.

2. பெரிய திரையைப் பயன்படுத்துங்கள்: முடிந்தவரை, அருகில் உள்ள சிறிய திரையை விட, தொலைவில் உள்ள பெரிய திரைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மடிக்கணினியைக் காட்டிலும் உங்கள் திரைப்படங்களைப் பார்க்க தொலைக்காட்சியைப் பயன்படுத்தவும். டேப்லெட் அல்லது ஸ்மார்ட்ஃபோனைக் காட்டிலும் ஆன்லைன் வகுப்புகள் அல்லது வீடியோ மீட்டிங்குக்கு டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்பை பயன்படுத்துங்கள்.

3. சரியான வெளிச்சம்: கண்கள் கூசுவதைத் தவிர்க்க திரையில் மறைமுக விளக்குகளுடன் நன்கு ஒளிரும் அறையில் திரைகளைப் பார்க்கவும். திரையைப் பார்ப்பது அல்லது மங்கலான வெளிச்சம் உள்ள அறையில் வாசிப்பது கண்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. திரைக்குப் பின்னால் வெளிச்சம் இருக்க வேண்டாம்.

Advertisement

4. ஸ்கிரீன் பிரைட்னஸ்: ஸ்கிரீன் பிரைட்னஸை மிதமான அளவில் வைத்திருங்கள். மிகக் குறைந்த அல்லது அதிக பிரகாசம் இரண்டுமே கண்களுக்கு அழுத்தத்தை அளிப்பதோடு கண் சோர்வை ஏற்படுத்தும்.

5. கண்ணாடிகளைப் பயன்படுத்துங்கள்: பரிந்துரைக்கப்பட்ட கண்ணாடிகள் (பவர்) எல்லா நேரத்திலும் அணிந்திருக்க வேண்டும். ஏனெனில், இதில் இருக்கும் கண்ணை கூசும் பூச்சு கண் அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்கும். கண்ணாடிகளை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். லென்ஸில் கீறல் ஏற்படாமல் பார்த்து கொள்வது நல்லது.

இதையும் படிக்க:
காரணமின்றி உடல் எடை அதிகரிக்குதா? அப்படி என்றால் உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கலாம்!

Advertisement

6. அடிக்கடி கண் சிமிட்டுங்கள்: நாம் திரையை பார்க்கும் போது நமது கண் சிமிட்டும் விகிதம் நிமிடத்திற்கு 14-16 முறையிலிருந்து நிமிடத்திற்கு 4-6 முறை குறைகிறது. கண் சோர்வு மற்றும் வறட்சியைத் தடுக்க நீங்கள் தொடர்ந்து சிமிட்டுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கண்கள் வறண்டதாகவோ அல்லது சோர்வாகவோ தோன்றினால் லூப்ரிகண்ட் ஐட்ராப்ஸைப் பயன்படுத்தலாம்.

7. வெளியில் நேரத்தை செலவிடுங்கள்: கிட்டப்பார்வை மற்றும் மோசமான பார்வையை தவிர்க்க வெளியில் அதிக நேரத்தை செலவிடுவது சிறந்த வழிகளில் ஒன்றாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இயற்கை ஒளியில் குறைந்தது 2 மணிநேரம் செலவிட பரிந்துரைக்கப்படுகிறது.

8. அருகிலுள்ள செயல்பாடுகளைக் குறைக்கவும்: குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய வாசிப்பு, டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் நுண்கலை வேலைகள் உள்ளிட்ட மிக அருகிலுள்ள செயல்களைச் செய்வதில் நேரத்தைக் குறைக்க வேண்டும். 45 நிமிடங்களுக்கு மேல் வேலையில் தொடர்ந்து கவனம் செலுத்துவது கிட்டப்பார்வையை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

Advertisement

இதையும் படிக்க:
இதை செய்தால் போதும்.. குளிர் காலத்தில் ஏற்படும் வறண்ட சருமத்திற்கான தீர்வு

9. நல்ல உணவை எடுத்துக் கொள்ளுங்கள்: பச்சை இலைக் காய்கறிகள், கேரட், பீட்ரூட், சிட்ரஸ் பழங்கள், பாதாம், வெண்ணெய், முட்டை மற்றும் மீன் நிறைந்த உணவு, ஆரோக்கியமான கார்னியா மற்றும் விழித்திரை செயல்பாட்டை ஆதரிக்க உதவுகிறது. இது கண்பார்வையை அதிகரிக்கும்.

10. கண் பயிற்சிகளைச் செய்யுங்கள்: பென்சில் புஷ்அப்கள், தொலைவில் கவனம் செலுத்தும் பயிற்சிகள் மற்றும் கண்களுக்கு ரெஸ்ட் கொடுப்பது போன்ற எளிய கண் பயிற்சிகள் தசைகளை வலுவடையச் செய்வதற்கும், கண் பலவீனத்தைப் போக்குவதற்கும் உதவுகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன