இந்தியா
மகாராஷ்டிரா முதல்வர் குறித்து மோடி எடுக்கும் முடிவை ஏற்போம்; நான் ஒரு தடையல்ல – ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிரா முதல்வர் குறித்து மோடி எடுக்கும் முடிவை ஏற்போம்; நான் ஒரு தடையல்ல – ஏக்நாத் ஷிண்டே
Vallabh Ozarkar மகாராஷ்டிர மாநிலத்தில் மஹாயுதியின் அமோக வெற்றிக்குப் பிறகு அடுத்த முதல்வர் யார் என்ற முட்டுக்கட்டைக்கு மத்தியில், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எடுக்கும் முடிவுகளை சிவசேனா ஏற்று ஆதரிக்கும் என்றும், சிவசேனா தரப்பில் இருந்து எந்த தடையும் இருக்காது என்றும் காபந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே புதன்கிழமை அறிவித்தார். ஆங்கிலத்தில் படிக்க: ‘I am not a hurdle’: Eknath Shinde clears way for BJP CM in Maharashtra, says will support top brass’s decision“நான் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் பேசி, ஆட்சி அமைப்பதில் எங்கள் தரப்பில் இருந்து எந்தத் தடையும் இருக்காது என்று கூறினேன். மோடி ஜி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர், அவர்களின் முடிவு எதுவாக இருந்தாலும், அவர்களின் முதல்வர் வேட்பாளர் யாராக இருந்தாலும், சிவசேனா அவரை முழுமையாக ஆதரிக்கும் என்று நான் கூறினேன்,” என்று தானேயில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் ஷிண்டே கூறினார்.வியாழக்கிழமை டெல்லியில் அமித் ஷாவுடன் இந்த விவகாரம் குறித்து நடைபெறும் பேச்சுவார்த்தையில் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவாருடன் நானும் கலந்துக் கொள்கிறேன் என்று ஷிண்டே கூறினார்.“நான் திறந்த மனதுடையவன். என்னைப் பொறுத்தவரை அன்புள்ள சகோதர் என்ற பதவி மற்ற பதவிகளை விட பெரியது. நான் அரசு அமைக்கும் செயல்முறையை தடுத்து நிறுத்தும் நபர் அல்ல. நான் நேற்று பிரதமரை (மோடி) அழைத்து, ஆட்சி அமைப்பதற்கு நான் ஒரு தடையல்ல என்று உறுதியளித்தேன். தேசிய ஜனநாயக கூட்டணி, மஹாயுதியின் உச்ச தலைவர் என்ற முறையில் உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும் நாங்கள் ஏற்போம் என்று அவரிடம் கூறினேன். ஏக்நாத் ஷிண்டேவை ஒரு தடையாக நினைக்க வேண்டாம் என்று அவரிடம் கூறினேன். பிரதமர் எடுக்கும் முடிவை நாங்கள் முழு மனதுடன் ஆதரிக்கிறோம்” என்று ஷிண்டே கூறினார்.முதல்வர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட ஷிண்டே, பதவி குறித்த பா.ஜ.க.,வின் முடிவை தனது கட்சியும் ஆதரிக்கும் என்றார். பா.ஜ.க மற்றும் பிரதமர் மோடியின் முடிவை சிவசேனா ஆதரிக்கும். இது குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடியிடம் பேசி, முதல்வர் பதவிக்கான அவர்களின் முடிவை ஆதரிக்கும் முடிவை தெரிவித்தேன்” என்று ஷிண்டே மீண்டும் வலியுறுத்தினார்.ஷிண்டே, சட்டமன்றத் தேர்தலில் மகாயுதியின் “மகத்தான” வெற்றிக்காக மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்தார், மேலும் அவர் தன்னை முதலமைச்சராகக் கருதவில்லை என்றும், ஆனால் அவர் ஒரு சாதாரண மனிதனைப் போல பணியாற்ற விரும்புவதாகவும் கூறினார். ஏழை விவசாயின் குடும்பத்தில் இருந்து வந்த அவர், விவசாயிகள், பெண்கள் மற்றும் விளிம்புநிலை ஏழைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அறிந்திருப்பதால், கடந்த இரண்டரை ஆண்டுகளில் தன்னால் நலத்திட்டங்களை துவக்கி செயல்படுத்த முடிந்தது என்று ஷிண்டே கூறினார்.“நான் ஒருபோதும் என்னை முதல்வராகக் கருதவில்லை, ஒரு சாதாரண மனிதனாகக் கருதுகிறேன். நான் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால் விவசாயிகள், பெண்கள், ஏழை மக்கள் நலனுக்காக அனைத்து முடிவுகளையும் எடுத்துள்ளேன். எனது 2.5 வருட பதவிக்காலத்தில் திருப்தி அடைகிறேன். பிரதமர் மோடியும், அமித் ஷாவும் எனது ஆட்சிக் காலத்தில் எனக்குப் பின்னால் பாறையைப் போல நின்றார்கள். கடந்த 2.5 ஆண்டுகளில் மாநிலம் மற்றும் மத்திய அரசு ஒரே அரசாக இருந்ததால், விரைவான வளர்ச்சியை எங்களால் செய்ய முடிந்தது,” என்று ஷிண்டே கூறினார்.ஷிண்டே மேலும் கூறுகையில், தான் ஒரு பதவிக்காக உழைத்தவரோ அல்லது எந்தப் பதவியிலும் இல்லை என்று வருத்தப்படவோ அல்லது மகிழ்ச்சியடையாத நபரோ அல்ல. “எங்களது கடைசி சொட்டு இரத்தம் வரை மக்கள் சேவைக்காக போராடவும் அர்ப்பணிக்கவும் தெரிந்தவர்கள் நாங்கள். மக்கள் என்னில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த முதல்வரைப் பார்த்தார்கள். நான் ‘மக்களின் முதல்வர்’ மற்றும் சாமானியன் என்ற அடையாளத்தை பெற்றுள்ளேன்,” என்று கூறினார்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“