Connect with us

பொழுதுபோக்கு

மசாணி அம்மன் கோவிலில் நடிகர் சூர்யா பட பூஜை: சூர்யா 45 படப்பிடிப்பு தொடக்கம்!

Published

on

Surya 45 RJ Balaji

Loading

மசாணி அம்மன் கோவிலில் நடிகர் சூர்யா பட பூஜை: சூர்யா 45 படப்பிடிப்பு தொடக்கம்!

பொள்ளாச்சி அருகே உள்ள மசாணி அம்மன் கோவிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம் – திடீரென நடிகர் சூர்யா வந்ததால் கோவில் வளாகத்தில் பரபரப்பு. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணி அம்மன் கோவில் தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோவில் ஆகும்,பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டார பகுதியில் சினிமா படபிடிப்பு நடக்கும் பொழுது இந்த கோவில் நடிகர்கள் நடிகைகள் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காமெடி நடிகர் யோகி பாபு கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்திருந்தார்.இதனிடையே தற்போது நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள அவரின் 45-வது படத்தின் படப்பிடிப்பு மற்றும் பூஜை மாசாணி அம்மன் கோவிலில் தொடங்கியது. முன்னதாக கோவில் வளாகத்திற்கு வந்த சூர்யாவிற்கு கோவில் செயல் அலுவலர் அழைத்துச் சென்று அறங்காவலர் குழு முரளி கிருஷ்ணன் நடிகர் சூர்யாவை வரவேற்று அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.பொள்ளாச்சி அருகே உள்ள மசாணி அம்மன் கோவிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம் pic.twitter.com/RqDeNu59G2தற்போது  மாசாணியம்மன் கோவில் கோவில் கும்பாபிஷேகம் வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளதால் பணிகள் நடைபெற்று வருகிறது மேலும் மாசாணியம்மன் பாலாயம் செய்யப்பட்ட இடத்தில் நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்தார். திடீரென நடிகர் சூர்யா கோவிலுக்கு வந்ததால் பொதுமக்கள் ஏராளமான தனது மொபைல் போனை செல்பி எடுத்துக் கொண்டனர் இதனால் கோவில் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன