Connect with us

சினிமா

ஒரு வார்த்தையில் தனது முடிவை சொன்ன அஜித்..? குலை நடுங்கிய மகிழ் திருமேனி..

Published

on

Loading

ஒரு வார்த்தையில் தனது முடிவை சொன்ன அஜித்..? குலை நடுங்கிய மகிழ் திருமேனி..

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி உலக அளவில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள மகிழ் திருமேனி அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகின்றன.அந்த வகையில்  அஜித் பற்றி மகிழ் திருமேனி கூறுகையில், ஒரு நடிகராக பைக், கார் ரேஸர் ஆகத்தான் அஜித் சாரை நமக்குத் தெரியும். ஆனால் அதையும் தாண்டி அவர் போட்டோகிராபியிலும் சிறந்த விளங்குகின்றார். அவருடைய சில புகைப்படங்கள் சர்வதேச அளவில் பரிசுகளை வென்றுள்ளன. துப்பாக்கிச் சுடுதலிலும் பரிசுகளை வென்றுள்ளார்.அஜித் சாருடன் போட்டி போட்ட அனைவருமே போட்டி அன்று மணிக்கணக்கில் பயிற்சி எடுத்த தொழில் முறை போட்டியாளர்கள். ஆனால் அஜித் சார் படப்பிடிப்பை முடித்துவிட்டு நேராக பந்தயத்திற்கு சென்று பரிசை வென்றுள்ளார். எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதில் முழு மனதோடு இறங்குவதில் தான் அவருக்கு வெற்றி சாத்தியமாகின்றது. என்று மகிழ் திருமேனி கூறியுள்ளார்.மேலும் கார் ரேஸில் பங்கேற்கும் போது எனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் என்னுடைய கமிட்மெண்டுகளை முடித்துச் செல்ல வேண்டும் என்று அஜித் சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.அதாவது, அஜித் சார் கார் ரேஸில் பங்குபற்றுவதற்காக பயிற்சி பெற்று வந்தார். இதன்போது அவருக்கு விபத்தும் நேர்ந்தது. அந்த வீடியோக்களை காட்டிய போது அதில் இரண்டு விபத்துக்கள் இடம் பெற்றுள்ளன. எனக்கு அதைப் பார்த்ததும் குலையே  நடுங்கி விட்டது.அந்த சமயத்தில் தான் ‘நான் இந்த ரேசில் பங்கேற்கும் போது எனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. என்னை நம்பி இரண்டு தயாரிப்பாளர்கள் பணத்தை முதலீடு செய்துள்ளார்கள். பலரின் உழைப்பு உள்ளது.. அதனால் நான் என்னுடைய கமிட்மெண்டுகளை முடித்து விட்டுச் செல்ல வேண்டும்’ என அஜித் கூறிய வார்த்தைகளை என்னால் மறக்க முடியாது என்றும் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன