Connect with us

சினிமா

புத்துல இருந்த ஈசல் மாதிரி பிரச்சினையா கிளம்புதே..! ரோகிணியை போட்டுக் கொடுக்கும் வித்யா.?

Published

on

Loading

புத்துல இருந்த ஈசல் மாதிரி பிரச்சினையா கிளம்புதே..! ரோகிணியை போட்டுக் கொடுக்கும் வித்யா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கிலும் முதல் 05 இடத்திற்குள் வருவதற்காக போட்டி போட்டு புதிய கதைக் களங்களில் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய கதைகளத்துடன் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்பதை விரிவாக பார்ப்போம்..அதன்படி ட்ராபிக் அதிகாரிகளால் தாக்கப்பட்ட தாத்தாவும் பாட்டியும் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனபோது அவர்களை அவருடைய உறவினர் சொந்த ஊருக்கே கூட்டிச் செல்ல தயாராகின்றார். இதன் போது தாத்தா தன்னிடம் இருந்த போனை, இதை ஒரு பொண்ணு விட்டு விட்டு சென்று விட்டார்.. அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு முத்துவிடம் போனை கொடுக்கின்றார்.வீட்டுக்கு வந்து போனை பார்த்த மீனா, இது உங்களுடைய போன் மாதிரி இருக்குது என்று சொல்ல, முத்து அதனை வாங்கி பார்த்து விட்டு இது என்னுடைய போன் தான் என்று சொல்லுகின்றார். மேலும் அண்ணாமலையிடம் தனது தொலைந்து போன போன் மீண்டும் கிடைத்து விட்டதாக சொல்லுகின்றார். இதனை கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகின்றார்.இதை தொடர்ந்து முத்துவும், மீனாவும் ரோகிணி, வித்யா மீது சந்தேகப்படுகின்றார்கள். அதன்படி வித்யாவின் புகைப்படத்தை அனுப்பி இதுதான் போனை தொலைத்த பெண்ணா என்று கேட்க, ஆமாம் என்று சொல்லுகின்றார்கள்.இதனால் முத்து அதிரடியாக வித்யாவின் வீட்டுக்குச் சென்று எதற்காக என்னுடைய போனை திருடினாய் என்று வித்யாவை கிடுக்குப்பிடி பிடிக்கின்றார்.  இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ..ஏற்கனவே ரோகிணிக்கும் வித்யாவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ள நிலையில், முத்துவின் ஃபோனை எடுப்பதற்கான காரணத்தை வித்யா எவ்வாறு சொல்லப் போகின்றார்? ரோகிணியை காட்டிக் கொடுப்பாரா? இல்லை பழியை தானே ஏற்றுக் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன