Connect with us

பொழுதுபோக்கு

வித்யாவால் வசமாக சிக்கிய ரோஹினி: முத்து ஆக்ஷன் என்ன? சிறகடிக்க ஆசை ப்ரமோ வைரல்!

Published

on

Rohini Vidya and Muthu

Loading

வித்யாவால் வசமாக சிக்கிய ரோஹினி: முத்து ஆக்ஷன் என்ன? சிறகடிக்க ஆசை ப்ரமோ வைரல்!

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சீரியலின் தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது அடுத்த வாரத்திற்கான ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் ரோஹினி வசமாக சிக்கிக்கொண்ட நிலையில், முத்துவின் ஆக்ஷன் என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. வெற்றி வசந்த், கோமதி பிரியா ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்துள்ள இந்த சீரியலில் நடிகரும், இயக்குனருமான ஆர்.சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், அண்ணாமலை விஜயா தம்பதிக்கு 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.முதல் மகன் மனோஜ், அம்மவுக்கு செல்லப்பிள்ளை, 2-வது மகன் முத்து அம்மாவுக்கு பிடிக்காத பிள்ளை ஆனால் அவனுக்கு அப்பாவை மிகவும் பிடிக்கும். மனோஜ் வீட்டில் ஏமாற்றி பணத்தை வாங்கிக்கொண்டு, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நிலையில், அவரது மனைவி ரோஹினி, தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கிறான் என்பதை மறைத்து விஜயா மனோஜ் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை ஏமாற்றியுள்ளார்.இதன் காரணமாக ரோஹினி எப்போது மாட்டுவார்? அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்பு எழுந்துள்ளது. இதனிடையே, கடைக்கு செருப்பு தைக்க வந்த ரோஹினி ப்ரண்ட், செல்போனை விட்டுவிட, அந்த கடைக்காரர் அந்த செல்போனை எடுத்து முத்துவிடம் கொடுத்துவிடுகிறார். முத்து அந்த போனை வீட்டில் வந்து பார்த்தபோது, அது தொலைந்துபோன அவரின் போன் என்று தெரிய வருகிறது. இதை அப்பா அண்ணாமலையிடம் முத்து சொல்கிறான்.இதை கேட்ட அண்ணாமலை இந்த போனை எடுத்தது யார் என்று தெரிந்தால், சத்யா வீடியோ வெளியிட்டது யார் என்று தெரியும் என்று சொல்ல, முத்துவுக்கு ரோஹினி மீது சந்தேகம் வர, அவரின் ப்ரண்ட் வித்யாவின் போட்டோவை அந்த செருப்பு தைக்கும் தொழிலாளிடம் காட்ட அவரும் இந்த பெண்தான் போனை விட்டுச்சென்றார் என்று சொல்கிறார். இதன் பிறகு வித்யா வீட்டுக்கு செல்லும் முத்து, என் போனை எடுத்தது நீதானா என்று கேட்க, அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன