இலங்கை
காலிச் சிறையில் கடும் மோதல்! நால்வர் காயம்

காலிச் சிறையில் கடும் மோதல்! நால்வர் காயம்
காலி சிறைச்சாலையில் நேற்றுப் பிற்பகல் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு கைதிகள் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 4 கைதிகளும் காலி தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
சிறைச்சாலைக்குள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் நேற்றுப் பிற்பகல் அங்கு குவிக்கப்பட்டனர். பாதுகாப்புக்காகச் சிறைச்சாலையின் வெளிப்புற எல்லையில் விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். அதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை காணப்பட்டது.