இலங்கை
மன்னார் சாந்திபுரத்தில் பற்றி எரிந்த வீடு!

மன்னார் சாந்திபுரத்தில் பற்றி எரிந்த வீடு!
மன்னார் சாந்திபுரத்தில் இன்று (27) குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக முழு வீடும் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது.
தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளபோதிலும் பெருமளவிலான உடமைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரம் மன்னார் மின்சாரசபை மன்னார் நகரசபையின் தீயணைப்பு வாகனம் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்ததுடன் முழுமையாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது
தீவிபத்திற்கான காரணத்தை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்