Connect with us

பொழுதுபோக்கு

பாக்யாவுக்கு என்ட் கார்டு: குடும்பத்தை காப்பாற்ற விஜய் டி.விக்கு வந்த எதிர்நீச்சல் நடிகை!

Published

on

Baakiy End Card

Loading

பாக்யாவுக்கு என்ட் கார்டு: குடும்பத்தை காப்பாற்ற விஜய் டி.விக்கு வந்த எதிர்நீச்சல் நடிகை!

சின்னத்தரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சீரியல்களின் தினசரி எபிசோடுகள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் பழைய சீரியல்கள் முடிவதும், அதற்கு பதிலாக புதிய சீரியல்கள் ஒளிபரப்பாவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது விஜய் டிவியின் புதிய சீரியல் ப்ரமோ ஒன்று வெளியாகியுள்ளது.விஜய் டிவி சீரியல்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கில் வீழ்ச்சியை சந்தித்தாலும், அவ்வப்போது, புதிய சீரியல்கள் ஒளிபரப்பவது வழக்கம். அதே சமயம், பழைய சீரியல்கள், மேற்கொண்டு கதை நகர்த்த முடியாமல், ஏற்கனவே வந்த காட்சிகளே மீண்டும் வரும்போது, சீரியல்கள், ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையிலான ஒரு சீரியல் தான் பாக்கியலட்சுமி. இல்லத்தரசியின் வாழ்க்கை என்று ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை விரைவில் முடிச்சி விடுங்க என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.மேலும், ஏற்கனவே வந்த காட்சிகளே மீண்டும் வருவதால், பாக்கியலட்சுமி சீரியலுக்கு இருந்த எதிர்பார்ப்பு அடங்கிப்போன நிலையில், இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்ற குரல் அதிகரிக்க தொடங்கியது. இதனை உணர்ந்த டிவி நிர்வாகமும் பாக்கியலட்சுமியின் குடும்பத்தை காக்கும் பொறுப்பை வேறு ஒருவருக்கு கொடுக்க முடிவு செய்து அதற்கான பணிகளில் களமிறங்கியுள்ளனர். அந்த சீரியல் தான் தனம். சன்டிவியின் எதிர்நீச்சல், சீரியலில், ஆதிரை கேரக்டரில் நடித்து வரும் நடிகை சத்யா தேவராஜன் இந்த சீரியலில் நாயகியாக நடிக்கிறார்.இந்த சீரியலில் சிறப்பு தொற்றத்தில் யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் நடிக்கிறார். குடும்பத்தில் உள்ள 2 தங்கை 1 தம்பி ஆகியோரை முன்னேற்ற வேண்டும் என்று ஸ்ரீகுமார் தனது மனைவியிடம் முதலிரவில் சொல்ல, அவர் நாம் இருவரும் சேர்ந்து இந்த பணியை செய்யலாம் என்று சொல்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் ஸ்ரீகுமார் இறந்துவிட, அவரின் குடும்பத்தை காப்பாற்ற, தனம் (சத்யா தேவராஜன்) களமிறங்குகிறார். ஆனால் மாமியாரிடம் அவருக்கு மரியாதை இல்லை. இதை தனமும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.இந்த சீரியலுக்கான ப்ரமோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், பாக்யலட்சுமி சீரியலும் இதே கதைதான், குடும்பத்தை காப்பாற்றும் மருமகளை மாமியார் மதிக்கவே மாட்டார். அதை பாக்யாவும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார். அதே போன்ற ஒரு கதையை மீண்டும் கொண்டு வந்துள்ளனர் என்ற கருத்துக்கள் வெளியாகியுள்ளது. அதேபோல், ஜீ தமிழின் வீரா சீரியலும் அண்ணன் இறந்துவிட்டதால் தங்கை அண்ணனின் ஆட்டோ ஓட்டும் தொழிலை எடுத்துக்கொள்வார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன