Connect with us

சினிமா

“ஐயப்பனே அஜித்தே, அஜித்தே கடவுளே” அஜித் பட வெற்றிக்காக ரசிகர்களின் நேர்த்திக்கடன்..

Published

on

Loading

“ஐயப்பனே அஜித்தே, அஜித்தே கடவுளே” அஜித் பட வெற்றிக்காக ரசிகர்களின் நேர்த்திக்கடன்..

நடிகர் அஜித் குமாரின் தீவிர ரசிகர்கள், அவரது விரைவில் திரைக்கு வரவுள்ள “விடாமுயற்சி” திரைப்படம் மாபெரும் வெற்றி பெறுவதற்காக சபரிமலையில் நேர்த்திக்கடன் செலுத்தினர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள சிறுவத்தூர் பகுதியைச் சேர்ந்த TN-31BOYS என்ற அஜித் ரசிகர் குழுமத்தின் இளைஞர்கள், ஐயப்ப விரதம் இருந்து இருமுடி கட்டி நடந்து சபரிமலை ஐயப்பனை தரிசித்தனர்.திரும்பியபோது, அவர்கள் “ஐயப்பனே அஜித்தே, அஜித்தே கடவுளே” என்று கோஷமிட்டதோடு, ஒரு தனிச்சிறப்பான பேனரை தங்களுடன் கொண்டு வந்தனர். அந்த பேனரில், அஜித் குமாரின் புகைப்படம் மற்றும் “விடாமுயற்சி வெற்றி பெறுக” என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.இந்த நிகழ்வை கண்ட ஐயப்ப பக்தர்கள், “நடிகர் அஜித்தை கடவுளாக நேசிக்கும் உங்களின் பக்தியும், ஆர்வமும் தங்கள் மன உறுதியையும் வெளிப்படுத்துகிறது” என பாராட்டினர். “கும்பிடுற சாமி” என சிலர் நகைச்சுவையுடன் இந்த இளைஞர்களின் நடவடிக்கைகளை விமர்சித்திருந்தனர்.அஜித் ரசிகர்களின் இந்த தனித்துவமான நடத்தை சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. “விடாமுயற்சி” திரைப்படம் அஜித்தின் கரியரில் ஒரு முக்கிய படமாக இருக்கக் கூடும் என்பதால், ரசிகர்கள் அதற்கான வெற்றியை உறுதி செய்ய தங்களது விசுவாசத்தை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன