விநோதம்
30 நாட்கள் கோதுமைக்கு பதில் தினை சாப்பிட்டால் என்ன ஆகும்..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

30 நாட்கள் கோதுமைக்கு பதில் தினை சாப்பிட்டால் என்ன ஆகும்..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!
நீங்கள் தினையை தவறாமல் சாப்பிடும் பட்சத்தில், அது உங்கள் எடையை நிர்வகிக்க உதவுவதாக மும்பையை சேர்ந்த ஜினோவா ஷால்பி மருத்துவமனையைச் சேர்ந்த உணவியல் நிபுணர் ஜீனல் படேல் கூறியுள்ளார்.
கோதுமையிலிருந்து தினைக்கு மாறுவது பற்றி நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், முதல் 30 நாட்களில் அது உங்களது உடலில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ஹோமியோபதி டாக்டர் நந்திதா ஷாவால் நிறுவப்பட்ட ஷரன் இந்தியா (SHARAN India) என்கிற சுகாதார விழிப்புணர்வு இணையதளத்தின் படி, வயிறு குறைவாக உப்புதல், வேகமாக வயிறு முழுவதுமாக நிறைந்தது போன்ற உணர்வு, பசியின்மை, எடை இழப்பு, மேம்பட்ட மனத் தெளிவு, சீரான குடல், தெளிவான சருமம் மற்றும் இலகுவாகவும், அதிக ஆற்றலுடனும் இருப்பது போன்ற மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறாக பல ஆச்சரியங்களை ஏற்படுத்தும் தினையை தினமும் உட்கொள்வதால், மேற்குறிப்பிட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் நிகழுமா, இவை அனைத்தும் உண்மையா என்கிற கேள்வியே பலரது மனதிலும் குழப்பத்தை ஏற்படுத்தும். இதன் உண்மைத்தன்மையை பற்றி விரிவாக பார்க்கலாம்.
தினை அதன் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. மக்களும் பெரும்பாலும் தினையை உணவில் சேர்த்துக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், உங்கள் உணவில் தினையைச் சேர்ப்பது பலனளிக்கும். ஏனெனில் தினையில், நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம், இரும்பு மற்றும் பி வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிரம்பியுள்ளன.
கோதுமைக்கு பதிலாக தினை சம்பந்தப்பட்ட உணவுக்கு மாறுவது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்று மும்பை சைனோவா ஷால்பி மருத்துவமனையின் உணவியல் நிபுணர் ஜினல் படேல் வலியுறுத்தியுள்ளார். கோதுமையில் க்ளூட்டன் நிரம்பி உள்ளது, இது உங்கள் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இந்த க்ளூட்டன் புரதம் உடல் வீக்கம், எடை அதிகரிப்பு, சோர்வு, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் ஒற்றைத் தலைவலி உள்ளிட்டவற்றிக்கு வழிவகுக்கும் என்றும் படேல் கூறினார்.
Also Read |
சுகரை குறைக்க உதவும் கறிவேப்பிலை விதை.. எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா..?
ஆனால், தினையை தொடர்ந்து சாப்பிடும் பட்சத்தில், இது உங்கள் உடல் எடையை நிர்வகிக்க உதவும் அதே வேளையில் செரிமானத்தையும் மேம்படுத்தும். இது நீண்ட நேரம் உங்களை வயிறு நிரம்பி இருப்பது போன்ற உணர்வோடு வைத்திருக்கும் மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றலை நீண்ட நேரத்திற்கு வழங்கும். குளுட்டனால் உங்கள் உடலின் பிரச்சனை இருப்பவராக இருந்தாலோ அல்லது செலியாக் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ, கோதுமை உள்ளிட்ட க்ளூட்டன் உள்ள உணவுகளை நீங்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்றும் படேல் கூறினார்.
தினையைக் கொண்டு பலவிதமான உணவுகளை சுவையை குறைக்காமல் உங்களின் தேவைக்கு ஏற்ப செய்ய முடியும். இருப்பினும், உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உங்கள் உணவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்வதற்கு முன் மருத்துவரை அணுகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் படேல் கூறினார்.