விளையாட்டு
ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியீடு!

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியீடு!
ஐ.சி.சி வாரம்தோறும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 ஆகிய போட்டிகளின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில் டெஸ்ட் தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 903 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 825 புள்ளிகளுடன் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2ஆம் இடத்திலும், இந்திய அணியின் இலக்கு காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ரிஷப் பண்ட் 736 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும் உள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 2ஆவது இன்னிங்சில் சதம் விளாசிய இந்திய வீரர் விராட் கோலி 9 இடங்கள் முன்னேறி 13ஆவது இடத்திலும் உள்ளார்.
இதேவேளை,அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அபாரமாகப் பந்துவீசிய பும்ரா, பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 883 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதல் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)