Connect with us

பொழுதுபோக்கு

நறுக்குனு கெட்ட ராதிகா: கோபிக்கு ஷாக் கொடுத்த செல்வி; பாக்யா ரியாக்ஷன்?

Published

on

baakiya Govi Selvai

Loading

நறுக்குனு கெட்ட ராதிகா: கோபிக்கு ஷாக் கொடுத்த செல்வி; பாக்யா ரியாக்ஷன்?

பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்துகொண்ட கோபிக்கு தற்போது விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ராதிகா. இதனால் கோபி உட்பட பாக்யா வீ்ட்டில் அனைவருமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.பாக்யாலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  ஜெனி பாக்யா, செல்வி இனியா ஆகிய 4 பேரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது நான் எந்த சூழ்நிலையிலும் என் தன்னம்பிக்கையை விட்டுக்கொடுக்கின்ற மாதிரி நடந்துகொள்ள மாட்டேன் என்று முடிவு செய்திருப்பதாக பாக்யா சொல்ல, விவாகரத்து பற்றி அங்கிள் என்ன முடிவு செய்திருக்கிறார் என்று தெரியலையே என்று ஜெனி சொல்கிறாள்.இதை கேட்ட செல்வி, அவர் என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்பது இருக்கட்டும், இந்த முடிவு பற்றி தெரிந்தவுடன் உன் மாமியார் சும்மா இருக்க மாட்டாங்க அக்கா என்று பாக்யாவிடம் சொல்ல, அந்த நேரத்தில் ஈஸ்வரி அங்கு வந்துவிடுகிறார். இதனால் அனைவரும் பேச்சை நிறுத்திவிடுகின்றனர். அப்போது செழியனிடம் உன் அப்பாகிட்ட பேசுனியா என்று ஈஸ்வரி கேட்க, இன்னும் பேசவில்லை என்று அவன் சொல்கிறான். அப்போது ஈஸ்வரி இந்த நேரத்தில் கோபிக்கு ஆதரவா நாம 2 பேர் தான்டா இருக்கனும் என்று சொல்கிறார்.அதன்பிறகு இருவரும் கோபியிடம் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது உன் அப்பா போனதுக்கு பிறகு நான் வாழவில்லையா, அவர் எனக்காக எவ்வளவோ விட்டுக்கொடுத்திருக்கிறார். ஆனாலும் அவர் போன பிறகு உங்க எல்லாருக்காகவும் நான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். ஆனால் ராதிகா உனக்கு பிரச்னை மேல் பிரச்னை தான் கொடுத்திருக்கிறாள். தொட்டதுக்கெல்லம் சண்டை போட்டு போலீஸ் ஸ்டேஷன் வரை கொண்டு போயிருக்கா.ராதிகா கூட எப்படிடா நிம்மதியா வாழ முடியும். அவ போனது சரிதான் என்று சொல்லும்போது கோபி நான் வெளியில் போயிவிட்டு வருகிறென் என்றுளு சொல்லிவிட்டு கிளம்புகிறான். அப்போது எங்கே போற என்று ஈஸ்வரி கேட்க, இந்த நோட்டீஸ் பற்றி ராதிகாவிடம் கேட்க போகிறேன் என்று கோபி சொல்ல, ராதிகா அந்த வீட்டில் இல்லையே நீ எங்க போற என்று கேட்கிறாள் ஈஸ்வரி. ஆனாலும் கோபி கிளம்பி சென்று ராதிகாவின் பழைய வீட்டு கதவை தட்டிக்கொண்டு இருக்கிறான்.பக்கத்து வீட்டார்கள் அங்கு யாரும் இல்லை எல்லாரும் காலி பண்ணிட்டு போய்ட்டாங்க என்று சொல்ல, கோபி அதிர்ச்சியாகி அங்கிருந்து கிளம்புகிறான். அடுத்து பாக்யாவும் அதே வீட்டுக்கு வந்து கதவை தட்ட, கோபி யாரும் இல்லை காலி பண்ணிட்டு போய்ட்டாங்களாலம் என்று சொல்கிறார். உடனே பாக்யா ராதிகாவுக்கு போன் செய்ய போன் சுவிட்ச் ஆப் என்று வருகிறது. உங்களை அவங்க மிஸ் பண்ணப்போ அவங்க அருமை உங்களுக்கு தெரியலை. இப்போ அவங்களை நீங்க மிஸ் பண்ணிட்டீங்க என்று கோபியிடம் சொல்லிவிட்டு பாக்யா செல்கிறாள்.அதன்பிறகு இரவில், பாக்யாவுக்கு ராதிகா போன் செய்து பேசிக்கொண்டு இருக்கிறாள். இதை ஒட்டு கேட்கும் கோபி, கடைசியாக நானும் பேசுகிறேன் என்று போனை வாங்கி பேச, கோபியின் பேச்சை கேட்டவுடன், ராதிகா போனை கட் செய்துவிடுகிறாள். அப்போது பாக்யாவிடம் கெஞ்சி மீண்டும் ராதிகாவுக்கு போன் செய்ய அவர் போனை சுவிட்ச் ஆப் செய்துவிடுகிறாள். இதனால் கோபி சோகமாக அங்கிருந்து கிளம்புகிறான். பாக்யா என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே நிற்கிறாள்.அந்த நேரத்தில் செல்வி நான் ஒன்னே ஒன்னு சொல்லுறேன். கோபி சாரை பார்த்து எனக்கு கொஞ்சம் கூட பாவமா தோனவே இல்ல. அவர் செஞ்சதுக்கு இப்போ அனுபவிக்கிறார் பொம்பளைங்களை ஏமாத்தணும்னு நினைக்கிறவங்களுக்கு கோபி சார் முடிவு பாடமா இருக்கும் என்று சொல்ல அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன