இந்தியா
Gautam Adani | அதானி விவகாரம்… நாள் முழுவதும் முடங்கிய நாடாளுமன்றத்தின் இரு அவைகள்!

Gautam Adani | அதானி விவகாரம்… நாள் முழுவதும் முடங்கிய நாடாளுமன்றத்தின் இரு அவைகள்!
அதானி குழுமம் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதாக எழுந்த புகார் குறித்து விரிவான விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவை நடவடிக்கைகளும் நாள் முழுவதும் பாதிக்கப்பட்டன.
நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் ஒரு நாள் இடைவெளிக்கு பிறகு புதன்கிழமை மீண்டும் தொடங்கின. அப்போது இந்தியா கூட்டணி கட்சிகள் சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர். அதில் அவையை ஒத்தி வைத்துவிட்டு அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் கோரிக்கைகளை மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவைத் தலைவர் நிராகரித்தனர் இதனால் இரு அவைகளும் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில் மாநிலங்களவை பகல் 11.30 மணிக்கும், மக்களவை பகல் 12 மணிக்கும், மீண்டும் தொடங்கியதும் அமளி தொடர்ந்ததால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
Also Read:
அமெரிக்கா புகாரில் அதானி பெயர் இல்லை! கிரீன் எனர்ஜி விளக்கம்
நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதானி விவகாரம் புயலை கிளப்பியுள்ளதால் நிறைவேற்ற வேண்டிய மசோதாக்கள் தொடர்பான அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.