இந்தியா
“அரசியலமைப்பு சட்டத்தால் எல்லை மீறாமல் செயல்படுகிறேன்” – பிரதமர் நரேந்திர மோடி!

“அரசியலமைப்பு சட்டத்தால் எல்லை மீறாமல் செயல்படுகிறேன்” – பிரதமர் நரேந்திர மோடி!
அரசியலமைப்பு சட்டத்தால் எல்லை மீறாமல் செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு தினத்தையொட்டி, டெல்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ஜம்மு காஷ்மீரில் அம்பேத்கரின் அரசியல் சாசனம் முழுமையாக அமல்படுத்தப்பட்டிருப்பது தான் அரசியலமைப்பின் அதிகாரம் என்று கூறினார். அரசியலமைப்பு சட்டத்தால் தனது பணியின் எல்லைக்குள் இருக்க முயற்சிப்பதாகவும், அத்துமீற முயற்சிக்கவில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2011-ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலின் நினைவு தினத்தை ஒட்டி, உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், இந்தியாவின் பாதுகாப்பிற்கு சவால் விடுக்கும் அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கும் தகுந்த பதிலடி கிடைக்கும் என்றும் கூறினார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு, அரசியல் சாசனத்தை குறைத்து மதிப்பிடுவதாக எதிர்க்கட்சிகள் கூறிவரும் விமர்சனங்களை நிராகரிப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.