தொழில்நுட்பம்
வாட்ஸ்அப் போல் இன்ஸ்டாகிராமிலும் வந்தது இந்த அம்சம்; என்ன தெரியுமா?

வாட்ஸ்அப் போல் இன்ஸ்டாகிராமிலும் வந்தது இந்த அம்சம்; என்ன தெரியுமா?
வாட்ஸ்அப்பில் இருப்பதை போலவே லொக்கேஷன் ஷேரிங் செய்யும் அம்சத்தை இன்ஸ்டாகிராமிலும் மெட்டா விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. டெம்பரவரி லொக்கேஷன் ஷேரிங் வசதி தனிநபர் மற்றும் குரூப் மெசேஜ்களில் அனுப்பலாம். எனினும் இந்த அம்சம் default ஆக டிஸ்ஏபிள் செய்யப்பட்டிருக்கும். பயனர் அதை எனெபிள் செய்து பயன்படுத்தலாம். வாட்ஸ்அப்பில் உள்ள லொக்கேஷன் ஷேரிங் போல் அல்லாமல் இன்ஸ்டாகிராமில் வரும் லொக்கேஷன் ஷேரிங் ஒரு மணி நேரம் மட்டுமே செயல்படும். அதன் பிறகு லொக்கேஷன் ஷேரிங் லிங்க் தானாகவே expire ஆகி விடும். பயனரின் லொக்கேஷனை ஒரு மணி நேரம் வரை மட்டுமே பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருவர் அனுப்பும் லொக்கேஷன் வேறு யாருக்கும் Forward செய்ய முடியாதபடியும் இந்த அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“