சினிமா
சூர்யா 44 திரைப்படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வெளியானது அப்டேட்…!

சூர்யா 44 திரைப்படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வெளியானது அப்டேட்…!
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் காதல் பாதயில் உருவாகியுள்ளது. சூர்யா கங்குவா திரைப்படத்தின் பின்னர் இப்படத்தில் கமிட்டாகியுள்ளார். கங்குவா கொடுத்த தோல்வியால் கட்டாய வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமான் மற்றும் ஊட்டியில் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமானது. தற்போது அங்கு படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்றது. இப்படத்தில் நடிகை நந்திதா தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது.இந்த நிலையில் தற்போது சூர்யா 44 , சூர்யா 45 என்பனவற்றை தன் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்சுப்பராஜ் இயக்கம் இப்படத்திற்கு ”கல்ட்” என்று பெயர் வைக்க முடிவெடுத்து இருக்கிறார். சூர்யா 44வது படத்திற்கு இந்த டைட்டிலை கிடைத்தால் வைத்து விடுவார்கள் என்று நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள்.