சினிமா
படுஜோராக களைகட்டிய வெற்றி வசந்த் கல்யாணம்.. யாரெல்லாம் ஆஜரானாங்க தெரியுமா?

படுஜோராக களைகட்டிய வெற்றி வசந்த் கல்யாணம்.. யாரெல்லாம் ஆஜரானாங்க தெரியுமா?
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்கள் ஏராளம். இவர்கள் வெள்ளித் திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகளை விட மக்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமானவர்களாக காணப்படுவார்கள்.அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து பலர் உச்சநிலையை அடைந்துள்ளனர். அது போலவே சிறகடிக்க ஆசை சீரியல் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒருவர் தான் வெற்றி வசந்த். இவர் நடித்த முதலாவது சீரியலின் மூலமே மிகவும் பிரபலமானார்.d_i_aஆரம்பத்தில் ஒரு நடிகனாக வேண்டும் என்று என்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார். அவருக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாக இந்த சீரியல் காணப்படுகின்றது. சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கேரக்டரில் நடிக்கும் வெற்றி உண்மையாகவே முத்துவின் குணத்தை உடைய கேரக்டராக தான் காணப்படுகின்றாராம்.இதைத் தொடர்ந்து பொன்னி சீரியல் நடிகையான வைஷ்ணவிக்கும் வெற்றி வசந்திற்கும் காதல் வளர்ந்தது. இருவரும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். அதன் பின்பு குறுகிய காலத்துக்குளே திருமண தேதியும் குறிக்கப்பட்டது. அதன்படி இன்றைய தினம் வெற்றி வசந்த் வைஷ்ணவியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.இந்த நிலையில், வெற்றி வசந்த் – வைஷ்ணவையில் திருமண புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. திருமணத்தின் போது இருவருமே மன மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்து பலரும் இன்று போல் என்றும் வாழ வேண்டும் என்று தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.