Connect with us

பொழுதுபோக்கு

பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநர் பாராட்டு விழா; “அஜீத் பங்கேற்க மாட்டார்” – சுரேஷ் சந்திரா தகவல்

Published

on

ravi - ajith

Loading

பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநர் பாராட்டு விழா; “அஜீத் பங்கேற்க மாட்டார்” – சுரேஷ் சந்திரா தகவல்

பத்மபூஷன் விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த நடிகர் அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோரை கவுரவிக்கும் விதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பாராட்டு விழா நடத்த உள்ளார். ஆனால் ஆளுநரின் பாராட்டு விழாவில் நடிகர் அஜீத் குமார் பங்கேற்க மாட்டார் என்று அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் விருது பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு 2025 ஆம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு அறிவித்து இருந்தது. அதன்படி, நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி என தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது.இதற்கிடையில், ஆளுநர் ஆர்.என்.ரவி பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்க மாட்டார் என, அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன