இந்தியா
school leave : மேலும் ஒரு மாவட்டத்துக்கு நாளை(நவ.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

school leave : மேலும் ஒரு மாவட்டத்துக்கு நாளை(நவ.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகை தென்கிழக்கே சுமார் 310 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே சுமார் 410 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 480 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. இது வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் 30-ம் தேதி காலை காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை (29ம் தேதி) டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுவை, விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இரண்டு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (29ம் தேதி) ஒரு நாள் விடுமுறை அறிவித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.