இந்தியா
School Holiday: விழுப்புரம் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… நாளைக்கும் ஸ்கூல் லீவு…

School Holiday: விழுப்புரம் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… நாளைக்கும் ஸ்கூல் லீவு…
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனையடுத்து, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி நகரக்கூடும். அதன் பிறகு, மேலும் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை கடலோரப் பகுதிகளில், காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே நாளை மறுநாள் (30-ஆம் தேதி) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (29.11.2024) ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யும்.
அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், கனமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (29.11.2024) வெள்ளிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.