Connect with us

பொழுதுபோக்கு

கதை திருட்டு வழக்கில் இயக்குனர் சங்கர் சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை!

Published

on

Director shankar

Loading

கதை திருட்டு வழக்கில் இயக்குனர் சங்கர் சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை!

இயக்குனர் சங்கருக்கு சொந்தமாக 1011 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம் செய்துள்ள தகவல் தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சங்கர். தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்த அவர், சமீத்தில் வெளியான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் திரைப்படங்களை கொடுத்தார். ஆனால் இந்த இரு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், இரு படங்களும் ட்ரோல்களை சந்தித்து வசூலில் வீழ்ச்சியையும் சந்தித்தது, இதனால் சங்கர் அடுத்து என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் தொற்றிக்கொண்டுள்ளது. அதேபோல், அவர் அடுத்து வேள் பாரி படத்தை இயக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், விக்ரம் மகன் துருவ் விக்ரம் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்து சங்கர் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே எந்திரன் திரைப்படத்தின் கதை தொடர்பான வழக்கில், இயக்குனர் சங்கருக்கு சொந்தமாக சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது: கடந்த 2010-ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான படம் எந்திரன். சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில் சந்தானம், கருணாஸ், ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். அறிவியல் புனைக்கதையில் வெளியான எந்திரன் படத்தில் ரஜினிகாந்த், அறிவியல் விஞ்ஞானி மற்றும் சிட்டி ரோபோ என 2 கேரக்டரில் நடித்திருந்தார். இந்திய சினிமாவில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த எந்திரன் ரஜினிகாந்துக்கு வித்தியாசனமாக படமாக அமைந்தது. இதனிடையே என் கதையை திருடி இயக்குனர் சங்கர் எந்திரன் படம் எடுத்திருக்கிறார்  பிரபல பத்திரிக்கையின் முதன்மை ஆசிரியரும், கவிஞருமான, ஆரூர் தமிழ்நாடான் கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் தான் கதையை திருடவில்லை. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி, சங்கர் தரப்பில், மனு தாக்கல் செய்ய்பட்டது. எழும்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.ED, Chennai has provisionally attached 3 immovable properties registered in the name of S. Shankar, with a total value of Rs.10.11 Crore (approx.) on 17/02/2025 under the provisions of PMLA, 2002.சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இது தொடர்பான சிவில் வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு, ஜூகிபா’ கதைக்கும் `எந்திரன்’ படத்தின் கதைக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதன் மூலம் காப்புரிமை மீறல் தெளிவாக தெரிகிறது. இதனால் சங்கருக்கு எதிரான இந்த காப்புரிமை வழக்கை சட்டப்படி நடத்தலாம் என்று, கூறியிருந்தது. இதனிடையே தற்போது இந்த வழக்கில், இயக்குநர் சங்கருக்கு சொந்தமான 10.11 கோடி மதிப்பிலான 3 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன