Connect with us

பொழுதுபோக்கு

ஒரு பாட்டுக்கு 100 பல்லவி: கண்ணில் ரத்தம் வர வைக்கும் அந்த இயக்குனர்; பா.விஜய் ஓபன் டாக்!

Published

on

Pa Vijay

Loading

ஒரு பாட்டுக்கு 100 பல்லவி: கண்ணில் ரத்தம் வர வைக்கும் அந்த இயக்குனர்; பா.விஜய் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியராக இருந்து தற்போது நடிகர் இயக்குனர் என அவதாரம் எடுத்துள்ள பா.விஜய், விஜயகாந்த் நடித்த ஒரு படத்தின் பாடலுக்காக சுமார் 100 பல்லவிகளை எழுதி இயக்குனரிடம் கொடுத்துள்ளார். அதில் ஒரு பல்லவிதான் பாடலாக வந்து பெரிய ஹிட்டாகியுள்ளது.பாக்யராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில், கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ஞானப்பழம் என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகமானவர் பா.விஜய் அதன்பிறகு, வேட்டிய மடிச்சி கட்டு, நீ வருவாய் என, உள்ளிட்ட படங்களுக்கு பாடல் எழுதிய பா.விஜய், 2000-ம் ஆண்டு, 9 படங்களுக்கு பாடல்கள் எழுதியிருந்தார். இதில் ஒரு படம் தான் வானத்தைபோலா. குடும்ப படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் விக்ரமன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.விஜயகாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில், மீனா, கௌசல்யா, லிவிங்ஸ்டன், பிரபுதேவா, செந்தில், உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்த இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. படத்தில் 8 பாடல்கள் இடம் பெற்றிருந்த நிலையில், 6 பாடல்களை பா.விஜய் எழுதியிருந்தார்.இதில் குடும்பத்துடன் ஒன்றாக இணைந்து பாடும் ஒரு பாடல் தான், எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்ற பாடல். இந்த பாடல் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள பாடல் ஆசிரியர் பா.விஜய், விக்ரமன் (படத்தின் இயக்குனர்) சாரிடம் பாடல் எழுத வேண்டும் என்றால் கண்ணில் இருந்து ரத்தம் வரும். அந்த அளவுக்கு கஷ்டமாக இருக்கும். பாடலை கேட்டுவிட்டு ஹிட் அல்லது ஹிட் இல்லை என்று சொல்லிவிட்டு போய்விடுகிறோம். ஆனால் அதை அவர் சீக்கிரம் முடிவு செய்ய மாட்டார்.வானத்தை போல படத்தில் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடலுக்காக 100 பல்லவிகளை எழுதி கொடுத்தேன். பல்லவி, சரணம் அடங்கிய புத்தகைத்தை அவரிடம் 20-20 ஆக கொடுப்போம். அதை அவர் படித்து பார்த்துவிட்டு, வேற எதாவது இருக்கா என்று அமைதியாக கேட்பார். அதன்பிறகு திரும்பவும் எழுத தொடங்கி, அடுத்த 5 நாட்கள் மீண்டும் எழுதுவோம். அவர் படத்திற்கு பாடல் எழுதி முடித்தால் நம்ம பேரு மறந்துபோய்விடும். அந்த அளவிற்கு வார்த்தைகள் வந்து மனதில் நிற்கும். அப்படி எழுதியது தான் எனக்கு பயிற்சியாக அமைந்தது என்று பா.விஜய் கூறியுள்ளார்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன