Connect with us

இந்தியா

Seeman | இறையாண்மைக்கு எதிராக பேசியதாக புகார்: சீமான் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published

on

Seeman | இறையாண்மைக்கு எதிராக பேசியதாக புகார்: சீமான் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Loading

Seeman | இறையாண்மைக்கு எதிராக பேசியதாக புகார்: சீமான் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Advertisement

2010-ம் ஆண்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்

சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2021-ம் ஆண்டு சீமான் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் 13 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளதால், வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டார். அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சாட்சிகள் விசாரணை தொடங்கி விட்டதால் வழக்கை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார்.

Advertisement

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்தனர். அதே வேளையில் வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன