Connect with us

இலங்கை

முகநூலில் அறிமுகமான யுவதியுடன் ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அறையில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி

Published

on

Loading

முகநூலில் அறிமுகமான யுவதியுடன் ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அறையில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி

  முகநூலில் அறிமுகமான அழகான யுவதியை சந்திக்க தொழிலதிபரை போதையில் ஆழ்த்தி விட்டு, பெறுமதியான பொருட்களை அபகரித்துக் கொண்டு யுவதி தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று ஹங்வெல்ல பொலிஸ் பிரிவில்  நடந்துள்ளது.

இதன்போது கிட்டத்தட்ட 2.1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நெக்லஸ் மற்றும் ஒரு மொபைல் போன் என்பனவற்றி யுவதி கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,

Advertisement

வென்னப்புவ, வைக்கல பகுதியில் வசிக்கும் ஒரு தொழிலதிபர், தனது இரண்டு நண்பர்களுடன், ஹன்வெல்ல பகுதியில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு, பேஸ்புக் சமூக ஊடக வலையமைப்பு மூலம் நட்பு கொண்ட ஒரு அழகான பெண்ணுடன் சென்றுள்ளார்.

நணபர்கள் குழுவினர் மது அருந்திய மயக்க நிலையில் இருந்த போது யுவதி கொள்ளையிட்டு சென்ற்அதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொழிலதிபர் அளித்த புகாரின்படி,

Advertisement

அந்தப் பெண் மூவருக்கும் போதைப்பொருளை (போதைப்பொருள் அல்லது மதுபானம்) கொடுத்து போதையில் ஆழ்த்தியதாகவும், அந்த நேரத்தில், அவர்கள் அதிக போதையில் இருந்த பிறகு, அந்தப் பெண் திருட்டைச் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இரவு வெகுநேரம் வரை ஹோட்டல் அறையில் தங்கியிருந்ததால் ஹோட்டல் நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டு ஊழியர்கள் சென்று பார்த்தபோது அவர்கள் அதிக குடிபோதையில் காணப்பட்டனர்.

அத்துடன் அவர்களுடன் வந்த அழகான யுவதி அங்கிருந்து சென்றுவிட்டமையும் தெரியவந்துள்ளது.

Advertisement

இதனையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் தொழிலதிபரையும் அவரது குழுவினரையும் எழுப்பிய பிறகு, தொழிலதிபரின் தங்க நெக்லஸ் மற்றும் மொபைல் போன் காணாமல் போனது தெரிய வந்தது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையில் , ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதுடன் தொழிலதிபரின் சமூக ஊடக கணக்குகளின் மூலம் யுவதியை அடையாளம் காணவும் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை காணாமல் போன தங்க நெக்லஸ் 10 பவுண் எடையுள்ளதாகவும், அதன் மதிப்பு கிட்டத்தட்ட 2 மில்லியன் ரூபாய் என்றும்   திருடப்பட்ட ஸ்மார்ட்போனின் மதிப்பு ரூ.75,000 என்றும் பொலிசார்  தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன