Connect with us

விநோதம்

100 கோடி ஆண்டுகளில் முதன் முறை நிகழும் ஆச்சரியம்!

Published

on

Loading

100 கோடி ஆண்டுகளில் முதன் முறை நிகழும் ஆச்சரியம்!

(புதியவன்)

கடந்த 100 கோடி ஆண்டுகளில் முதல் முறையாக இரண்டு வெவ்வேறு உயிரினங்கள் ஒரே உயிரினமாக இணையும் அதிசய நிகழ்வு நடந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இந்த உலகம் பல்வேறு அதிசயங்கள் விநோதங்கள் நிறைந்ததாகவே இருப்பதுடன் பல சமயம் இயற்கையில் நடக்கும் விஷயங்கள் நமக்கு பெரும் வியப்பைத் தருவதாகவே அமைகிறது.

கடந்த நூறு கோடி ஆண்டுகளில் முதன்முறையாக தற்போது இவ்வாறான நிகழ்வு இடம்பெறுகின்ற நிலையில் இது வரும் காலத்தில் பல மாற்றங்களுக்குக் காரணமாக இருக்குமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இரண்டு உயிர்கள் ஒரே உயிரினமாக ஒன்றிணைத்துள்ள இதை ஆய்வாளர்கள் பிரைமரி எண்டோசைம்பியோசிஸ் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

இந்த பூமி உருவானது முதல் இதற்கு முன்பு வரை இரண்டே இரண்டு முறை மட்டுமே இந்த எண்டோசைம்பியோசிஸ் நிகழ்வு நடந்துள்ளது.

முதல் முறை நடந்த போது மைட்டோகாண்ட்ரியா என்று சிறு உயிரினம் உருவானதுடன் இதுவே அடுத்தடுத்து பல்வேறு வகையான உயிர்களும் தோன்ற வழிவகுத்தது.

அடுத்து இரண்டாவது முறை ஏற்பட்ட போது அது தன் தாவரங்களின் தோற்றத்திற்கு வழிவகை செய்ததுடன் இதற்கிடையே சர்வதேச ஆய்வாளர்கள் இப்போது மீண்டும் இதுபோன்ற நிகழ்வு நடப்பதை உறுதி செய்துள்ளனர்.

Advertisement

டலில் பொதுவாகக் காணப்படும் ஒரு பாசி வகைக்கும் ஒரு பாக்டீரியாவிற்கும் இடையே தான் இந்த பரிணாம நிகழ்வு ஏற்படப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர் டைலர் கோலே தெரிவிக்கையில்”இந்த நிகழ்வு முதல்முறை நடந்த போது பல புதிய உயிரினங்கள் தோன்றின.

அடுத்தடுத்து பல்வேறு உயிரினங்கள் தோன்ற இந்த மைட்டோகாண்ட்ரியா நிகழ்வு நடந்தது முக்கியமானதுடன் அதன் பிறகு மீண்டும் நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை இந்த நிகழ்வு நடந்தது.

Advertisement

அப்போது நடந்த நிகழ்வை குளோரோபிளாஸ்ட் எனக் குறிப்பிடுவதுடன் செடி, கொடி போன்ற தாவரங்கள் உருவாக இதுவே முக்கிய காரணமாகும்” என தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில் சுமார் 100 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இதேபோன்ற ஒரு நிகழ்வு நடக்க உள்ளதுடன் இந்த செயல்பாடுகளின் போது பாசிக்கள் ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் மற்றும் பாதுகாப்பை வழங்கும்.

அதற்குப் பதிலாகப் பாக்டீரியா இத்துடன் இணைவதுடன் இதுவரை பாசிகளால் சில செயல்முறைகளைச் செய்ய முடியாமல் இருந்தது.

Advertisement

இந்நிலையில் இந்த செயல்முறைக்குப் பிறகு அவை எல்லாம் மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த இரண்டு முறையும் இந்த நிகழ்வுக்கு பிறகு உலகில் பல மாற்றங்கள் நடந்துள்ளதால் இப்போதும் அதுவே நடக்கும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்தோடு இது பரிணாம வளர்ச்சி குறித்த புதிய புரிதலை வழங்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதுடன் குறிப்பாக இவை விவசாயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நமது உலகம் இப்போது இருக்கக் கடந்த காலங்களில் நடந்த பிரைமரி எண்டோசைம்பியோசிஸ் நிகழ்வுகளே முக்கிய காரணமாக இருந்துள்ளது.

Advertisement

இந்தச் சூழலில் இப்போது மூன்றாவது முறையாக இந்த பிரைமரி எண்டோசைம்பியோசிஸ் நிகழ்வு நடந்துள்ள நிலையில் அது பல வித பரிணாம மாற்றங்களை ஏற்படுத்தலாமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ப)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன