சினிமா
மீண்டும் திரைக்கு வரும் திரௌபதி…மோகன் ஜியின் அடுத்த அசத்தல்!

மீண்டும் திரைக்கு வரும் திரௌபதி…மோகன் ஜியின் அடுத்த அசத்தல்!
மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற “திரௌபதி” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் மோகன் ஜி தற்போது அதன் இரண்டாம் பாகத்தினை உருவாக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமூக அங்கீகாரம் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவான “திரௌபதி” திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது, அதே வெற்றி பாதையில் “திரௌபதி 2” உருவாகவுள்ளது என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் மீண்டும் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிக்கவுள்ளார். கடந்த “திரௌபதி” படத்தில் அவரது தீவிரமான நடிப்பின் காரணமாக இப்போது இரண்டாம் பாகத்திலும் தொடர உள்ளார். இதில் இசையமைப்பாளராக கிப்ரான் பணியாற்றுகிறார். முதல் பாகத்தின் இசை மற்றும் பின்னணி இசை ரசிகர்களை அதிகம் கவர்ந்த நிலையில், இம்முறை இசையில் புதிய பரிமாணமத்தை வழங்கவிருக்கிறார்.இயக்குநராக மோகன் ஜியின் படைப்புகள் சமூக உணர்வு மற்றும் வலுவான திரைக்கதை கொண்டது என்பதால், “திரௌபதி 2”-ம் பாகத்திலும் இது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தில் சமூக அரசியல் மற்றும் சாதிய வன்முறை போன்ற கதை அமைப்பு ரசிகர்களிடம் பிரபலமடைந்தது. இரண்டாம் பாகம் இதை மேலும் உயர்த்தும் வகையில் உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “திரௌபதி 2” படம் எப்போது வெளியாகும்? இது முதல் பாகத்தை விட அதிக தாக்கம் ஏற்படுத்துமா? போன்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளன. இந்த திரைப்படம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வருமா என்பது படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் வெளிவரும் எனப் படக்குழு தெரிவிக்கின்றது.