விநோதம்
வானூர்தியின் ஜன்னல்கள் ஏன் வட்ட வடிவில் உள்ளது தெரியுமா!!

வானூர்தியின் ஜன்னல்கள் ஏன் வட்ட வடிவில் உள்ளது தெரியுமா!!
நாம் வானூர்திகளில் பயணித்திருப்போம் அல்லது வானூர்திகளைப் பார்த்திருப்போம். அவ்வாறு பார்க்கும்போது வானூர்தியில் உள்ள ஜன்னல்கள் மிகவும் சிறியதாகவும் வட்ட வடிவிலும் இருக்க என்ன காரணம்? என சிந்தித்திருப்போமா…
பெரிய ஜன்னல்கள் அதிக உயரத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும். ஆனால், சிறிய ஜன்னல்கள் ஒளியின் கட்டுப்பாட்டுக்கு காரணமாய் அமைகின்றன.
உயரத்தில் பறக்கும் வானூர்திகளாவன, கடுமையான அழுத்தம் மற்றும் வெப்பநிலை ஏற்ற இறக்கங்களுக்கு முகம் கொடுக்கின்றது. இத்தகைய சூழ்நிலைகளை தாங்கும் விதமாக வானூர்தி கட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக சிக்கலான முறையில் வட்ட வடிவ ஜன்னல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வானூர்தி ஜன்னல்களை பெரிதாக்குவது என்பது, வானூர்திக்கு பாரிய ஆபத்தை விளைவிக்கும்.
மேலும் வானூர்தியிலுள்ள சிறிய ஜன்னல்கள் பல அடுக்குகள் பூச்சுகள் மற்றும் சிறப்புப் பொருட்களிலிருந்து உருவாக்கப்படுகின்றன. இவை பறவைகளின் தாக்குதல்கள், குப்பைகளின் தாக்குதல்களுக்கு எதிராக மீள்தன்மையுடையவை.
அதுமட்டுமின்றி அதிக உயரத்திலும் வேகத்திலும் வட்ட வடிவ ஜன்னல்கள் உடையாமல் இருக்கும்.
சதுர வடிவான ஜன்னல்களால் காற்றின் அழுத்தத்தை தாங்க முடியாது. இதன் காரணமாகவே வானூர்தியின் ஜன்னல்கள் வட்ட வடிவில் அமைக்கப்படுகின்றன.(ப)