Connect with us

சினிமா

கணவரால் நான் சந்தோசமா இல்ல.. சூர்யா ரசிகர்களை கடுப்பாக்கிய ஜோ-வின் இன்ஸ்டாகிராம் கமெண்ட்!

Published

on

Loading

கணவரால் நான் சந்தோசமா இல்ல.. சூர்யா ரசிகர்களை கடுப்பாக்கிய ஜோ-வின் இன்ஸ்டாகிராம் கமெண்ட்!

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்று சொல்வார்கள் அப்படி ஒரு வேலையை தான் ஜோதிகா பார்த்து இருக்கிறார்.

சமீபத்தில் ஜோதிகா தொடர்ந்து இரண்டு தினங்களாக தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். ஜோதிகாவின் உடல் எடை குறைப்பு, ஸ்டைல் என அத்தனையும் ரசிகர்களை வெகுவாக பாராட்ட வைத்தது.

Advertisement

உண்மையை சொல்ல போனால் அந்த இன்ஸ்டாகிராம் போஸ்டில் அதிகமாக அவரை புகழ்ந்து தள்ளியது சூர்யா ரசிகர்கள் தான்.

அதில் ஒரு ரசிகை ஜோதிகா ஏற்கனவே விருது விழா மேடையில் பேசிய வசனம் ஒன்றை கமெண்ட் செய்திருந்தார்.

உங்கள் அழகின் ரகசியம் என்ன என்று கேட்கும்போது, ஜோதிகா என்னுடைய புருஷன் கொஞ்சம் சந்தோஷமா வச்சிருக்காரு என்று சொல்லுவாங்க.

Advertisement

இந்த டயலாக் பல வருடங்களாக பேமஸ் ஆக இருக்கிறது. இந்த வசனத்தை ஜோதிகாவின் போஸ்டுக்கு கமெண்ட் செய்திருந்தபோது, இல்லை இப்போதெல்லாம் நான் என்னை சந்தோஷமாக வைத்திருக்கிறேன் என பதில் அளித்திருக்கிறார் ஜோதிகா.

இது சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதே மாதிரி உங்கள் கணவரை விட விஜய் சிறந்தவர் என கமெண்ட் செய்த ஒருத்தருக்கு சிரிப்பு எமோஜியை பதிவிட்டு இருக்கிறார்.

இந்த கமெண்டுக்கு ஜோதிகா பதில் அளிக்காமல் இருந்திருக்கலாம் என்பது சூர்யா ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

Advertisement

ஏன் ஜோதிகா இந்த அளவுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே நெகட்டிவிட்டியை சம்பாதித்துக் கொள்கிறார். ஒரு வேளை இனி தமிழ் சினிமா பக்கம் வரவே கூடாது என நினைத்து விட்டாரோ என்னவோ.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன