சினிமா
மணிமேகலை என் தங்கச்சிதான்.. கடுப்பாகிய தொகுப்பாளினி விஜே அஞ்சனா..

மணிமேகலை என் தங்கச்சிதான்.. கடுப்பாகிய தொகுப்பாளினி விஜே அஞ்சனா..
சன் தொலைக்காட்சியில் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான விஜே அஞ்சனா, தற்போது திரைப்பட நிகழ்ச்சிகள் மற்றும் ஒருசில பேட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். 90ஸ் காலத்தில் இருந்தே அஞ்சனாவை பலரும் பார்த்து வருகிறார்கள்.தற்போது 35 வயதாகும் அஞ்சனா சன் டிவியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்திருக்கிறார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து விஜே அஞ்சனாவா இது என்று கூறும் அளவிற்கு மாடர்ன் லுக்கில் போட்டோஷூட் கலெக்ஷனை பகிர்ந்து வருகிறார்.அதேபோல் அஞ்சனாவை பார்க்கும் போதும் பலரும் மணிமேகலையும் அவரும் அக்கா – தங்கச்சியா என்றும் கேள்விகளை கேட்பார்கள். இதுகுறித்து அஞ்சனா கூறுகையில், என்னிடம் பலர் இதே கேள்வியை கேட்கிறார்கள். நீங்களும் மணிமேகலையும் சகோதரிகளா?.நான் இல்லை என்று சொன்னால் கூட நம்ப மாட்டார்கள். உங்கலை பார்த்தாலே அப்படித்தான் இருக்கிறது நீங்க எதற்காக பொய் சொல்றீங்க என்று கேட்பார்கள். எனக்கு என்ன சொல்வது என்று தெரியாது. ஒருக்கட்டத்தில் ஆமா மணிமேகலை என் தங்கச்சி தான் என்று நானே சொல்லியிருக்கிறேன்.அதேபோல் என்னுடைய வாழ்க்கையில் நான் பல கஷ்டங்களை சந்தித்திருக்கிறேன். அப்பாவின் இறப்பிற்கு பின் குடும்பங்களை சுமந்து செல்லும் பெரிய சுமை என்னை நோக்கி வந்தது. அதை தாங்கிக்கொண்டு என் திருமண வாழ்க்கையிலும் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்று விஜே அஞ்சனா தெரிவித்துள்ளார்.