Connect with us

விநோதம்

தினமும் முட்டை சாப்பிடுவதால் எவ்வளவு நன்மை தெரியுமா.!

Published

on

Loading

தினமும் முட்டை சாப்பிடுவதால் எவ்வளவு நன்மை தெரியுமா.!

(இன்று ஒரு தகவல்)

இலங்கையில் நாளாந்தம் மாறுபடும் முட்டை விலையால் அதனை வாங்கி சாப்பிடும் மக்களின் வீதம் குறைவடைந்து செல்கின்றது என்றுதான் சொல்லவேண்டும்.

Advertisement

நாட்டில் அதிகரித்துச் செல்லும் விலைவாசிக்கு மத்தியில் முட்டையின் விலையும் அதிகரித்தவண்ணமே உள்ளது.

இந்த நிலையில் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு என்னென்ன ஊட்டச்சத்துகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்

முட்டை வெள்ளைக் கருவில் அதிக அளவு புரதம் உள்ளது. இது தசைகளின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்பதற்கும் அவசியமானது. முட்டையில்  A, D, E, B1, B2, B5, B6, B12, B9 போன்ற பல வைட்டமின்கள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், கண் பார்வை, நரம்பு மண்டலம், இரத்த ஓட்டம் போன்றவற்றை மேம்படுத்தும்.

Advertisement

கல்சியம், இரும்பு, மக்னீசியம், பொஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் உள்ளன. இவை எலும்புகள், பற்கள், இரத்தம் போன்றவற்றின் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை

முட்டையில் உள்ள கொழுப்பு ஆரோக்கியமான கொழுப்பு. இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. முட்டையில் கொலஸ்ட்ரோல் உள்ளது என்பது உண்மைதான். ஆனால், கொலஸ்ட்ரோல் அளவு அதிகமாக இருப்பவர்கள் மட்டும் முட்டையை தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் எந்த பிரச்சனையும் இல்லை.

முட்டை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், தசைகளின் வளர்ச்சிக்கு உதவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும், மூளை செயல்பாட்டை மேம்படுத்தும், கண் பார்வைக்கு நல்லது, எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தும்.(ப)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன