Connect with us

சினிமா

கொஞ்சமும் தகுதி இல்லாத நபர் செளந்தர்யா!! சர்ச்சையை ஏற்படுத்தி பிக்பாஸ் வின்னர் முத்துக்குமரன்..

Published

on

Loading

கொஞ்சமும் தகுதி இல்லாத நபர் செளந்தர்யா!! சர்ச்சையை ஏற்படுத்தி பிக்பாஸ் வின்னர் முத்துக்குமரன்..

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்து ஒரு மாதத்திற்கும் மேலான நிலையில் பிரபலங்கள் குறித்த தகவல்களும் விஷயங்களும் இணையத்தில் பரவிக்கொண்டே இருக்கிறது. பிக்பாஸ் பிரபலங்களும் வெளியில் இணைந்து டூர் செல்வது பேட்டிக்கொடுப்பதுமாக நாட்களை கடந்து வருகிறார்கள்.தற்போது முத்துக்குமரன் அண்மையில் அளித்த பேட்டியொன்றில் செளந்தர்யா பற்றி பேசியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிக்பாஸ் விமர்சகரும் இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் பேட்டியில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.அதில் பிக்பாஸ் விளையாட்டில் தொடருவதற்கு கொஞ்சமும் தகுதி இல்லாத நபர் செளந்தர்யா. இது என் கருத்து, என் கருத்து வெகுஜன மக்களின் கருத்தாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. செளந்தர்யா 2வது இடத்திற்கு வந்துள்ளார் என்றால் அவர் செய்தது மக்களுக்கு பிடித்துள்ளதால் தான். அவருக்கு வாக்குகள் கிடைத்தது. அவர்களுக்கு செளந்தர்யா பிடித்துள்ளது.எனக்கும் கூட செளந்தர்யாவை பிடித்திருக்கலாம், ஆனால் பிக்பாஸ் போட்டியில் நீடிப்பதற்கான உழைப்பை செளந்தர்யா செலுத்தினாரா என்றால்? இல்லை என்கிற பார்வையில் முத்துக்குமரன் கூறுவது.செளந்தர்யா விளையாட்டில் முன்னேறுவதற்குத்தான் தகுதியில்லாத நபர், அதனால் தான் பிக்பாஸ் கேட்கும் போது எல்லாம் சொன்னேன், நான் என் கருத்தில் இருக்கும்போது எதிர் கருத்தை நான் தவறு என்று கூறமுடியாது அல்லவா? என்று முத்துக்குமரன் பகிர்ந்துள்ளார். அவர் பேசிய வீடியோ இணையத்தில் டிரெண்ட்டாக முத்துக்குமரை செளந்தர்யா ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன