இலங்கை
கிழக்கு மாகாணத்தை நிர்வகிக்க முடியாவிட்டால் பொறுப்பை வழங்குங்கள் – சாணக்கியன் கோரிக்கை!

கிழக்கு மாகாணத்தை நிர்வகிக்க முடியாவிட்டால் பொறுப்பை வழங்குங்கள் – சாணக்கியன் கோரிக்கை!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் கிழக்கு மாகாணத்தை நிர்வகிக்க முடியாவிட்டால் அந்தப் பொறுப்பை எங்களிடமாவது வழங்குங்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று (03) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் வலுசக்தி அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர், இரண்டு நாட்களுக்கு முன்னர் வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சின் குழுநிலை விவாதத்தின் போது ஜனாதிபதி பதிலளித்து உரையாற்றும் போது பாதாள உலக கும்பலின் செயற்பாடுகள் மட்டக்களப்பு, யாழ்ப்பாணத்தில் நடக்கலாம் என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் ஆரையம்பதியில் வாள்வெட்டு குழுக்களின் செயற்பாட்டால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர்.
அந்த வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் கிழக்கு மாகாணத்தில் நிர்வாகம் செய்ய முடியாவிட்டால் எமது மூத்த அரசியல்வாதிகள் இருக்கின்றனர். ஹிஸ்புல்லா இருக்கின்றார்.
நான் மூத்த அரசியல்வாதியாக இல்லாவிட்டாலும் 15 வருடங்களாக அரசியலில் ஈடுபடுகின்றேன். உங்களால் கிழக்கு மாகாணத்தின் எதிர்காலத்தை பார்க்க முடியாவிட்டால் எங்களிடமாவது தாருங்கள். இந்த மாவட்டத்தில் பிரச்சினைகள் வீதிக்கு வரும் வரையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு எங்களால் இருக்க முடியாது என்றார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்