இலங்கை
பொருளாதாரப் பின்னடைவு: சரிசெய்துள்ளது இலங்கை! நாணய நிதியம் பாராட்டு

பொருளாதாரப் பின்னடைவு: சரிசெய்துள்ளது இலங்கை! நாணய நிதியம் பாராட்டு
பொருளாதாரப் பின்னடைவு நிலையை இலங்கை ஓரளவு சரிசெய்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான மூத்த தலைவர் பீற்றர் ப்ரூவர் இலங்கையின் பொருளாதார நிலைதொடர்பில் தெரிவித்ததாவது:
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கைக்கான நிதியுதவியின் மூன்றாம்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் இலங்கையின் நிதியிருப்பும் பொருளாதார மேம்பாடும் அதிகரித்துள்ளன. இலங்கையின் செயற்றிட்டங்களும் பொருளாதார மீள்வருகைக்கான முயற்சிகளும் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவை.
கடந்த ஐந்து வருடங்களில் இழந்த தனது வருமானத்தில் 40 வீதமானவற்றை இலங்கை மீட்டெடுத்துள்ளது. இலங்கையின் பொருளாதார ஏற்றம் வெளிப்படையாகத் தெரிகின்றது. இந்த வளர்ச்சியைத் தொடர்ந்தும் தக்கவைக்கக்கூடிய முன்னெடுப்புக்களையும் இலங்கை மேற்கொண்டுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும் – என்றார்.