இலங்கை
அடிப்படைவாதக் குழு உன்னிப்பாக கண்காணிப்பு!

அடிப்படைவாதக் குழு உன்னிப்பாக கண்காணிப்பு!
கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு தலைதூக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றோம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. கிழக்கில் கல்முனை பகுதியில் முஸ்லிம் அடிப்படைவாத குழுவொன்று தோற்றம் பெற்றுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஏற்கனவே தெரிவித்த கருத்துத் தொடர்பில் அமைச்சர் நளிந்தவிடம் கேட்கப்பட்டது.
இதன்போது அமைச்சர் நளிந்த தெரிவித்ததாவது:
கிழக்கு மாகாணத்தை மையமாகக்கொண்ட அடிப்படைவாதக் குழுவொன்று தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது. அது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்புப் பிரிவினரும் அவதானம் செலுத்தியுள்ளனர். அந்தக் குழு நெருக்கமாகக் கண்காணிக்கப்படுகின்றது. அதன் செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினர் மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளனர் – என்றார்.