விளையாட்டு
SA vs NZ Live Score: இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப் போவது யார்? நியூஸி., – தெ. ஆ அணிகள் இன்று மோதல்

SA vs NZ Live Score: இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப் போவது யார்? நியூஸி., – தெ. ஆ அணிகள் இன்று மோதல்
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரில், துபாயில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த முதல் அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. நியூசிலாந்து – தென் ஆப்பிரிக்கா மோதல் இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று புதன்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் நியூசிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆங்கிலத்தில் படிக்கவும்: South Africa vs New Zealand LIVE Cricket Score, Champions Trophy 2025 2nd Semi-Finalஇந்தப் போட்டியில் வெற்றியை ருசிக்கும் அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதும். அதனால், இந்த இரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. நேருக்கு நேர் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து – தென் ஆப்ரிக்கா அணிகள் இதுவரை 73 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 26-ல் நியூசிலாந்தும், 42-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டத்தில் முடிவில்லை. சாம்பியன்ஸ் கோப்பையில் மோதி உள்ள இரு ஆட்டங்களில் தலா ஒன்றில் வெற்றி கண்டுள்ளன. 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2015 ஒருநாள் உலகக் கோப்பை ஆகிய ஐ.சி.சி நாக் அவுட்களில், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை இரண்டு முறை சந்தித்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணியே வெண்றுள்ளது.