இந்தியா
இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி அமோக வெற்றி

இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி அமோக வெற்றி
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி 6,17,942 வாக்குகள் பெற்று எல்.டி.எஃப் கட்சியின் சத்யன் மொகேரியை 2,09,906 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு, 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். ஒருவர் 2 தொகுதிகளில் எம்.பி பதவி வகிக்க முடியாது என்பதால், வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி எம்.பி-யாக நீடிக்கிறார்.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் திகதியுடன் நாட்டில் வெற்றிடமாக உள்ள மற்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் திகதியையும் அறிவித்தது. அதன்படி, வயநாடு மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நவம்பர் 13-ம் திகதி நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் வேட்பாளர் பிரியங்கா காந்தி, சி.பி.ஐ (எம்) தலைமையிலான எல்.டி.எஃப் கட்சியின் சத்யன் மொகேரி மற்றும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான நேற்று (23) நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை முடிவில், வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி 6,17,942 வாக்குகள் பெற்று எல்.டி.எஃப் கட்சியின் சத்யன் மொகேரியை 2,09,906 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மூன்றாம் இடத்தை பிடித்த பா.ஜ.க-வின் நவ்யா ஹரிதாஸ் 1,09,202 வாக்குகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.