
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 05/03/2025 | Edited on 05/03/2025

விக்ரம் நடிப்பில் சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வீர தீர சூரன் பாகம் 2’. இப்படம் இரண்டு பாகமாக உருவாகுவதாகவும் முதலில் இரண்டாவது பாகத்தை வெளியிட்டு பின்பு முதல் பாகத்தை வெளியிடலாம் என்ற வித்தியாசமான பிளானில் படக்குழு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தை ரியா ஷிபு தயாரித்து வர எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டில் டீசர் முன்னதாக வெளியாகியிருந்த நிலையில் பின்பு டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இப்படம் இம்மாதம் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தில் இரண்டாவது பாடலாக ‘ஆத்தி அடி ஆத்தி’ பாடல் லிரிக் வீடியோவுடன் வெளியாகியுள்ளது. இதில் விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் கதாபாத்திரங்கள் திருமணம் செய்து கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அப்போது இருவரும் எந்தளவிற்கு காதல் செய்கிறார்கள் என்பதை விவரிக்கும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் – சாதிகா இருவரும் பாட விவேக் வரிகள் எழுதியுள்ளார்.