Connect with us

பொழுதுபோக்கு

விஜய் வர்மாவை பிரிந்த தமன்னா – நடிகை காதல் தோல்விக்கு காரணம் என்ன?

Published

on

Tamanna Bhatia x

Loading

விஜய் வர்மாவை பிரிந்த தமன்னா – நடிகை காதல் தோல்விக்கு காரணம் என்ன?

Tamannah Bhatia and Vijay verma news: நடிகை தமன்னாவும், நடிகர் விஜய் வர்மாவும் திருமண தேதியை அறிவிப்பார்கள் என காத்திருந்த ரசிகர்கள் இந்த ஜோடியின் காதல் முறிவு செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தமன்னாவுக்கும் விஜய் வர்மாவுக்கும் என்ன ஆச்சு, ஏன் இந்த திடீர் பிரேக்அப் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என கலக்கிய நடிகை தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ் வெப்சீரிஸில் நடித்தபோது தமன்னாவுக்கும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. புத்தாண்டை கொண்டாட கோவாவுக்கு சென்ற இடத்தில் இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி வைரலானது.தமன்னா, விஜய் வர்மா இருவரும் உடனடியாக தங்கள் காதலை உறுதிப்படுத்தவில்லை என்றாலும்,  ஜோடியாக சினிமா நிகழ்ச்சிகள், பார்ட்டிகளுக்கு ஒன்றாக சென்று வந்தனர். இருவரும் காதலிக்கிறீர்களா என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.ஒரு கட்டத்தில் தமன்னா, விஜய் வர்மா இருவரும் காதலிப்பதாக ஒப்புக் கொண்டனர். இருவருடைய வீட்டிலும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினார்கள். இதனால், தமன்னா – விஜய் வர்மா ஜோடி விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், வந்ததோ தமன்னா – விஜய் வர்மா ஜோடி பிரேக்அப் செய்திதான். இதனால், தமன்னா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த சில வாரங்களுக்கு முன்பே, தமன்னாவும், விஜய் வர்மாவும் பிரிந்துவிட்டார்களாம். இதை அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் உறுதி செய்திருக்கிறார்.  தமன்னா – விஜய் வர்மா காதல் முறிந்துவிட்டாலும் இனி நல்ல நண்பர்களாக இருக்க முடிவு செய்திருக்கிறார்களாம். கோலிவுட் முதல் பாலிவுட் வரை பேசப்பட்ட தமன்னா – விஜய் வர்மா ஜோடி பிரிந்ததற்கான காரணம் தெரியவில்லை. நடிகை தமன்னா மற்றும் விஜய் வர்மா பிரேக்அப் செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திருமண அறிவிப்பு எதிர்பார்த்த நிலையில், காதல் முறிவுக்கு காரணம் என்ன? தமன்னா ரசிகர்கள் சந்தேகத்தில் குழப்பமாக உள்ளனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன