சினிமா
மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இணைந்த முன்னணி நடிகை..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இணைந்த முன்னணி நடிகை..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் சுந்தர்.C ‘மூக்குத்தி அம்மன் 2′ படத்தை உருவாக்க முடிவெடுத்துள்ளார். இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.’மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தில் முன்னணி நடிகையாக மீனா இணைகிறார் என்ற தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. இவர் ஏற்கனவே பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அந்தவகையில் இந்த படத்திலும் மீனா இணைவது அனைத்து ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இப்படத்தின் பூஜை அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் நயன்தாரா தான் மீண்டும் அம்மனாக நடிக்கப் போகின்றாரா? அல்லது புதிய திருப்பமாக மீனா நடிப்பாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மூக்குத்தி அம்மன் 2 படத்தில் மீனா இணைந்த தகவல் வெளியான பிறகு, ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அந்தப் படத்தை எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.