சினிமா
100 கோடியை கடந்து வசூல் சாதனை படைக்கும் டிராகன்.. மாஸ் காட்டும் பிரதீப்

100 கோடியை கடந்து வசூல் சாதனை படைக்கும் டிராகன்.. மாஸ் காட்டும் பிரதீப்
லவ் டுடே படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த டிராகன் படமும் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.அதுவும் 10 நாட்களில் இப்படம் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக சமீபத்தில் படக்குழுவினர் வெற்றிவிழாவை நடத்தினார்கள்.இந்த நிலையில், 13 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் டிராகன் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 13 நாட்களில் ரூ. 120 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூலாக பார்க்கப்படுகிறது. மேலும் இனி வரும் நாட்களிலும் வசூலை வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், இப்படத்தின் இறுதி வசூல் எவ்வளவு வரும் என்று.