Connect with us

பொழுதுபோக்கு

கணவருடன் தகராறு இல்லை; நடந்தது என்ன? மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்ட பாடகி கல்பனா

Published

on

Singer Kalpana

Loading

கணவருடன் தகராறு இல்லை; நடந்தது என்ன? மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்ட பாடகி கல்பனா

சென்னையை சேர்ந்த பிரபல சினிமா பாடகி கல்பனா ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.  அவர் நேற்று மயக்க நிலையில் அவரது இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டார். இந்நிலையில் கல்பனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தற்போது அவர் குணமடைந்து வரும் நிலையில் விடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். “எங்கள் குடும்பத்தை பற்றி ஊடகங்களில் தவறான பிரசாரம் பரப்பப்படுகிறது. நான் அதை அனைவருக்கும் விளக்க விரும்புகிறேன். நானும் என் கணவரும் மகளும் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். எனக்கு 45 வயது. நான் முனைவர் பட்டமும், எல்.எல்.பி பட்டமும் படித்து வருகிறேன்.என் கணவரின் ஆதரவுடன் இதையெல்லாம் என்னால் செய்ய முடிகிறது. எனக்கு அவர் மேல் எந்த கோபமும் இல்லை எங்கள் குடும்பம் மிகவும் நெருக்கமானது. தொழில்முறை மன அழுத்தம் காரணமாக தூங்க முடியாமல் தவித்த நான் அதற்கு சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவர்கள் பரிந்துரைத்தபடி தான் அதிக அளவு மாத்திரைகளை எடுத்து கொண்டேன். அதனால் தான் நான் மயங்கி விழுந்தேன்.#singerkalpana pic.twitter.com/ZatyUvPuikஎன் கணவர் சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கை, காலனி வாசிகள் மற்றும் காவல்துறையினரின் உதவி காரணமாக நான் இங்கே உங்கள் முன் இருக்கிறேன். விரைவில் மீண்டும் எனது பாடல்களால் உங்களை மகிழ்விப்பேன். அவருடைய ஆதரவினால் தான் நான் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறந்து விளங்குகிறேன் என் வாழ்க்கையின் சிறந்த பரிசு என் கணவர் எனது உடல்நலம் குறித்து அக்கறை கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” என்று அவர் வீடியோவில் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன