Connect with us

பொழுதுபோக்கு

நடிகை சமந்தாவின் அப்பா திடீர் மரணம்: திரையுலகினர் இரங்கல்!

Published

on

Samantha Father Death

Loading

நடிகை சமந்தாவின் அப்பா திடீர் மரணம்: திரையுலகினர் இரங்கல்!

தென்னந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, தற்போது பல படங்களை கைவசம் வைத்து நடித்து வரும் நிலையில், இன்று திடீரென அவரின் தந்தை ஜோசப் பிரபு மரணமடைந்தார்.தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல், தற்போது பாலிவுட் வரை சென்றுள்ள நடிகை சமந்தா, தான் சினிமாவில் இவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டதற்கு தனது குடும்பம் தான் முக்கிய காரணம் என்று பல மேடை மற்றும் நிகழ்ச்சிகளில் கூறியிருந்தார். இதனிடையே, சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்தார்.அவரது மறைவு குறித்து அறிவித்துள்ள சமந்தா ‘மீண்டும் சந்திக்கும் வரை அப்பா’ என்று பதிவிட்டுள்ளார். தந்தையின் மரணத்தால், பரிதவிப்பில் இருக்கும் சமந்தாவுக்கு திரையுலக பிரபலங்கள், நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா 4 ஆண்டுகளுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு அவரை பிரிந்தார்.தற்போது சமந்தா படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இவர் விவாகரத்து பெற்றபோது, அவரின் அப்பா, ஜோசப் பிரபு குறித்து செய்திகள் வந்தது. மேலும் சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து ஆன ஒரு வருடம் கழித்து அவர்களது திருமண புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்ட அவர், கடந்த காலத்தை பற்றி பேசியிருந்தார். இந்த பிரிவை ஏற்றுக்கொள்ள நீண்டகாலம் ஆனதாகவும், புதிய தொடக்கத்திற்கான நம்பிக்கை தற்போது வந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தனது அப்பா குறித்து பேசிய சமந்தா, இந்தியாவில் அனைத்து பெற்றோரை போலவும் என்னையும் எனது அப்பா பாதுகாப்பாக பார்த்துக்கொண்டார். எனது திறமைகளை சரியாக மதிப்பிட்டவர் அவர் தான் என்று உருக்கமாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன