இலங்கை
நாட்டில் நிலவும் வானிலையில் திடீர் மாற்றம் : மக்களின் கவனத்திற்கு!

நாட்டில் நிலவும் வானிலையில் திடீர் மாற்றம் : மக்களின் கவனத்திற்கு!
நாட்டில் தற்போது நிலவும் வறண்ட வானிலை மார்ச் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் மாற்றமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. Lanka4.com
நாட்டின் பல இடங்களில், குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக்கூடும்.
இன்று (09) இரவு கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Lanka4.com
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. Lanka4.com
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்