Connect with us

இந்தியா

புதுடில்லியில் வெடிப்பு சம்பவம்

Published

on

Loading

புதுடில்லியில் வெடிப்பு சம்பவம்

இந்திய தலைநகர் புதுடில்லியில் பிரசாந் விகார் என்ற பகுதியில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

டெல்லியின் ரோகினியில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில் அமைந்துள்ள பிவிஆர் மல்டிபிளெக்ஸ் திரையரங்குக்கு அருகே உள்ள இனிப்பகத்துக்கு எதிரே மர்மமான முறையில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை காலை 11.48 மணிக்கு நடந்துள்ளது. இதனை டெல்லி தீயணைப்பு படையினர் உறுதி செய்துள்ளனர்.

Advertisement

வெடிப்புச் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த மூன்று சக்கர வாகனத்தின் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த இடம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததும் நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்துள்ளனர். வெடிகுண்டு கண்டறியும் குழு, போலீஸ், தீயணைப்பு படையினர் மற்றும் மோப்ப நாய் துணையுடன் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன