Connect with us

சினிமா

மாலைதீவில் குடும்பத்துடன் enjoy பண்ணும் நடிகை….வைரலான வீடியோ இதோ!

Published

on

Loading

மாலைதீவில் குடும்பத்துடன் enjoy பண்ணும் நடிகை….வைரலான வீடியோ இதோ!

பிரபல நடிகை ராகுல் ப்ரீத்சிங், தற்போது மாலைதீவிற்குச் சுற்றுலா சென்றுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக படப்பிடிப்புகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்த குடும்பத்துடன் ஓரளவு நேரத்தை செலவிடும் நோக்கத்தில் இந்த விசிட்டை மேற்கொண்டுள்ளார்.மாலைதீவில் தன்னுடைய ஹாலிடே அனுபவங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டுள்ள ராகுல் ப்ரீத்சிங் தனக்கு மிகவும் சந்தோஷமான தருணம் இது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் குடும்பத்துடன் இருப்பதே மிகுந்த மகிழ்ச்சி தரும் எனவும் தனது இன்ஸ்டாகிராம் பதிவுகளில் தெரிவித்துள்ளார்.பொதுவாகவே மாலைதீவு பல பிரபலங்கள் ஓய்வெடுக்கும் இடமாக மாறிவருகின்றது. அந்தவகையில் ராகுல் ப்ரீத்சிங் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து மாலைதீவில் தனது சுற்றுலாவைக் கொண்டாடி வருகிறார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் மூலம் கடற்கரையில் ஜாலியாக சுற்றி குடும்பத்தினருடன் சந்தோசமாக இருப்பதாகப் பகிர்ந்துள்ளார். சமீபகாலமாக பிரபலமான ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர் தொடர்ந்தும் சினிமாவில் பிஸியாகவே உள்ளார். இதனால் இந்த ஓய்வு அவருக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன